ஆழ்வார் முதல் கூட்டாஞ்சோறு வரை!

By Sudha

Swetha
ஆழ்வார் படத்தில் அஜீத்தின் தங்கையா நடித்த ஸ்வேதா இன்று கை நிறையப் படங்களுடன் தனி நாயகியாக கலக்க ஆரம்பித்துள்ளார்.

சினிமாவுக்கு வருவதற்கு முன்பு மாடலிங்கில் இருந்தவர் ஸ்வேதா. பின்னர்தான் ஆழ்வார் படம் மூலம் சினிமாவுக்கு வந்தார். ஆழ்வார் படத்தில் அறிமுகம் கிடைத்தாலும் தனி நாயகியாக வருவதற்கு அவருக்கு உடனடியாக
வாய்ப்புகள் வரவில்லை.

பின்னர் வந்தது வள்ளுவன் வாசுகி. இப்படத்தில்தான் அவர் முதல் முறையாக நாயகியாக நடித்தார். பின்னர் தெலுங்கில் விசிட் அடித்தார். அங்கு பானுச்சந்தரின் மகன் ஜெயந்த்துடன் இணைந்து தனது முதல் படத்தை முடித்தார்.

தற்போது மீண்டும் தமிழுக்கு வந்துள்ளார். தமிழில் தற்போது எனக்கு நிறையப் பட வாய்ப்புகள் வருகின்றன. கூட்டாஞ்சோறு படத்தில் அஜய்குமாருடன் இணைந்து நடிக்கிறேன். அன்பு சரவணன் இதை இயக்குகிறார். அதேபோல அரவிந்த்கிருஷ்ணாவுடன் இணைந்து நானும் என் காதலும், மணிசேகர் இயக்கத்தில் கல்லுப்பட்டி என்று பிசியாகியுள்ளேன் என்கிறார் ஸ்வேதா.

குடு்ம்பப் பாங்கான முகமாக இருந்தாலும் கூட கவர்ச்சிக்கு தடை சொல்வதில்லையாம் ஸ்வேதா. கவர்ச்சியும், நடிப்பும் தனது இரு கண்கள் என்று கூறும் ஸ்வதோ.நடிப்புக்கு வாய்ப்புள்ள கதைகளுக்கு முன்னுரிமை கொடுப்பதாகவும், கதைக்கேற்ற கவர்ச்சி தனக்கு ஓ.கே என்றும் சொல்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X