சோப்ராவை பிடித்த ராணி முகர்ஜி

தில் வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே, மொஹாபதின் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை இயக்கியவர் ஆதித்ய சோப்ரா. தூம், சக்தே இந்தியா ஆகிய படங்களையும் தயாரித்துள்ளார்.
இவரது மனைவி பாயல். இவருக்கும், சோப்ராவுக்கும் 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. அருமையாகப் போய்க் கொண்டிருந்த பாயலின் திருமண வாழ்க்கையில் புயலைப் போல நுழைந்து நிம்மதியைக் குலைத்துப் போட்டார் ராணி முகர்ஜி.
ஆதித்ய சோப்ராவை தனது காதல் வலையில் வீழ்த்தினார். இதனால் பாயலை மறந்து விட்டு ராணியுடன் காதல் புரிந்து வந்தார் ஆதித்ய சோப்ரா.
இந்தக் காதலுக்கு ஆதித்ய சோப்ராவின் குடும்பத்தினர் ஒட்டுமொத்தமாக எதிர்ப்பு தெரிவித்தனர். பாயல்தான் எங்கள் வீட்டு ராணி. வேறு எந்த ராணியையும் ஏற்க மாட்டோம் என சோப்ராவிடம் பிடிவாதமாக கூறி விட்டனர்.
ஆனால் அதை சோப்ரா பொருட்படுத்தவில்லை. அவருக்கு பாயலை விட ராணியே பெரிதாக தெரிந்தார். இதனால் பாயலை விவாகரத்து செய்ய முடிவெடுத்தார். மும்பையில் உள்ள பந்த்ரா குடும்ப நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி வழக்கு தொடர்ந்துள்ளார்.
விரைவில் விவாகரத்து கிடைக்கும் எனத் தெரிகிறது. அதன் பின்னர் ராணியைக் கைப்பிடிக்கவுள்ளார் சோப்ரா.
சோப்ராவுக்கு மும்பையில் சொத்துக்கள் குவிந்து கிடக்கின்றன. அவரது கணக்கில் மட்டும் பல நூறு கோடிகள் உள்ளனவாம். மும்பையில் உள்ள யாஷ் சோப்ராவின் பெயரில் உள்ள ஸ்டுடியோவின் மதிப்பு மட்டும் ரூ. 1000 கோடிகள் என்கிறார்கள்.
இத்தனையையும் குறி வைத்தே சோப்ராவை காதலித்து வந்தார் ராணி என்ற குற்றச்சாட்டு உள்ளது. இந்த ஸ்டுடியோவை எழிலுற மாற்றி அமைத்தவரே பாயல்தான். ஆனால் இப்போது அந்த ஸ்டுடியோ ராணியின் சொத்தாக மாறப் போகிறது.
மே மாதம் சோப்ரா, ராணி முகர்ஜி திருமணம் நடக்கலாம் எனக் கூறப்படுகிரது. இருப்பினும் எங்களைப் பொறுத்தவரை பாயல்தான் எங்கள் மருமகள் என்று சோப்ராவின் குடும்பத்தினர் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











