அங்கீதாவின் சுனாமி!

By Staff

Ankita
தமிழிலிலிருந்து காணாமல் போய் விட்ட முன்னாள் ரஸ்னா பாப்பா அங்கீதா, தெலுங்கில் முழு நீள கவர்ச்சி நாயகியாகியுள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு சுனாமி 7 எக்ஸ் என்ற புதிய படத்தில் அவர் நடிக்கப் போகிறார்.

எம்.ஏ.செளத்ரி இயக்கும் இப்படத்தின் நாயகர்களாக கிருஷ்ண பகவான், ரகு பாபு ஆகியோர் நடித்துள்ளனர். இருவருக்கும் நாயகியாக அங்கீதா வருகிறார்.

சிம்மாத்ரி மூலம் தெலுங்கில் நாயகியாகனவர் அங்கீதா. அந்தப் படத்தின் ஷூட்டிங்கின்போது ஹீரோ நவ்தீப் தன்னிடம் அத்துமீறி நடந்து கொண்டதாக குற்றம் சாட்டி பரபரப்பை ஏற்படுத்தினார் என்பது நினைவிருக்கலாம்.

இதனால் தெலுங்கு படவுலகினர் மத்தியில் அங்கீதா மீது சற்றே பயம் பிறந்தது. அவரைப் புக் செய்வதில் ஆர்வம் குறைந்ததால் தெலுங்கில் வாய்ப்பிழந்தார் அங்கீதா.

இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு புதிய பட வாய்ப்பைப் பிடித்துள்ளார் அங்கீதா. அதுதான் சுனாமி 7 எக்ஸ்.

இப்படத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு கவர்ச்சிகரமாக தோன்றுகிறாராம் அங்கீதா. சமீபத்தில் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளைப் படமாக்கியபோது, அங்கீதாவின் துணிச்சலான கவர்ச்சியைப் பார்த்து யூனிட்டே ஆடிப் போய் விட்டதாம்.

சுனாமியை விட பயங்கரமா இருக்கும் போலிருக்கே..!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X