நீச்சல் உடை-அனுஷ்காவுக்கு ரூ. 1 கோடி!

தமிழில் மாதவன் ஜோடியாக இரண்டு படத்தில் அறிமுகமானவர் அனுஷ்கா. ஆனால் தமிழில் தொடர்ந்து நல்ல வாய்ப்புகள் அமையாததால், தெலுங்குக்கே போய்விட்டார். இன்று தெலுங்குப் படவுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவர்.
பரபரப்புக்கும் கிசுகிசுவுக்கும் இன்று அனுஷ்காவை விட்டால் ஆளில்லை என்று சொல்லும் அளவுக்கு ஓஹோ என்று வந்துவிட்டார்.
இப்போது தமிழில் பெரும் வெற்றி பெற்ற பில்லா (ரஜினி நடித்து பின் அஜீத்தால் ரீமேக் செய்யப்பட்ட) படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்படுகிறது. இதில் பிரபாஸ் நாயகனாக நடிக்கிறார். தமிழில் நயன்தாரா நடித்த வேடத்தில் அனுஷ்கா நடிக்கிறார்.
இந்தப் படத்தில் நான்கு காட்சிகளில் நீச்சல் உடையில் நயன்தாரா நடித்ததுபோல் அனுஷ்காவையும் நடிக்க கேட்டனர்.
அதற்கு சற்று தயக்கத்துக்குப் பின் ஒப்புக்கொண்ட அனுஷ்கா, சம்பளமாக ரூ.1 கோடி தர வேண்டும் என்று கேட்டுள்ளார்.
தயாரிப்பாளரும் இயக்குநரும் அதற்கு உடனடியாக ஒப்புக் கொண்டனர். இதன்மூலம் தெலுங்கில் இலியானாவுக்கு அடுத்தபடியாக அதிக சம்பளம் பெறும் ஒரிஜினல் தெலுங்கு நடிகையாகியிருக்கிறார் அனுஷ்கா.
ஏற்கெனவே யோகா விளம்பரம், தேன் விளம்பரம் என தன் டிராக்கில் கோடிக்கணக்கில் அனுஷ்கா வருமானம் பார்ப்பது தனிக் கதை!


Click it and Unblock the Notifications











