பாவனாவின் பங்களா!!
{image-Bhavana-(9)250_23022008.jpg tamil.filmibeat.com}வருகிற மலையாளப் புத்தாண்டு உண்மையிலேயே பாவனாவுக்கு ஸ்பெஷல் புத்தாண்டாக மலரப் போகிறது.
அன்றுதான் தனது புதிய வீட்டில் பால்காய்ச்சி குடியேறுகிறார் இந்த கேரளத்துப் பைங்கிளி.
தமிழில் பெரிய நடிகையாக வலம் வந்தாலும், தனது புதிய வீட்டை அவர் சென்னையில் கட்டவில்லை. இங்கே இன்னும் ஓட்டல் வாசம்தான்.
தனது சொந்த ஊரான திருச்சூரில் மிகப் பிரமாண்டமான மாளிகை ஒன்றைக் கட்டி வருகிறார் பாவனா.
ஏப்ரல் மாத மலையாள புத்தாண்டுக்குள் கட்டுமானப் பணியை முடித்துவிடுமாறு கட் அண்ட் ரைட்டாகச் சொல்லிவிட்டாராம் எஞ்ஜினியர்களுக்கு.
மலையாள-தமிழ் திரை உலகப் பிரமுகர்கள் அனைவரையும் அழைத்து பெரிய விருந்து தரப் போகிறாராம் புதுவீடு புகும் நாளன்று.
Comments


Click it and Unblock the Notifications