மம்முட்டி ஜோடியாக கெளரி முஞ்ஜால்!

இளம் நடிகர்களுடன் ஜோடியாக நடித்து வந்த அவர், இப்போது மம்முட்டிக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்கிறார். இதுகுறித்து பெங்களூரில் நிருபர்களைச் சந்தித்த கெளரி முஞ்ஜால், இப்படிக் கூறினார்:
சில நடிகர்களுக்கு வயது ஒரு பிரச்சினையே கிடையாது. மெகா ஸ்டார் மம்மூட்டி அப்படிப்பட்டவர். அவருக்கு ஜோடியாக நடிக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்.
புனீத் ராஜ்குமாருடன் முதல் கன்னடப் படத்திலும், அல்லு அர்ஜுனுடன் முதல் தெலுங்குப் படத்திலும் நடித்தேன். இப்போது மலையாளத்தில் எனது முதல் படமே மம்மூட்டியுடன் அமைந்துவிட்டது மகிழ்ச்சியாக உள்ளது, என்றார்.
மம்முட்டியின் இந்தப் படத்துக்கு பலேரி மாணிக்யம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. திருமணமாகி 11 நாட்களில் கொல்லப்பட்டுவிடும் ஒரு இளம் மனைவியைப் பற்றிய புலனாய்வு கதையாம் இந்தப் படம்.
Comments


Click it and Unblock the Notifications