எனக்கு வெட்கம் ஜாஸ்தி-அதிதி

By Staff

Sunder C in Aindham Padai
ஐந்தாம் படை படத்தில் நாயகியாக அறிமுகமாகும் அதிதி செளத்ரி, தனக்கு வெட்கம் ஜாஸ்தி என்கிறார். ஆனால் நடிக்க வருவதற்கு முன்பு இருந்ததை விட இப்போது அது சற்றே குறைந்து விட்டதாகவும் வெட்கப் புன்னகையோடு கூறுகிறார்.

சுந்தர்.சி. ஹீரோவாக நடிக்கும் படம் ஐந்தாம் படை.இதில் அவருக்கு ஜோடியாகியுள்ளார் நிஃப்ட் மாணவியான அதிதி. டெல்லி கில்லியான அதிதி சினிமாவுக்கு வந்தது தனிக் கதை.

அவரது புகைப்படம் பேஷன் போட்டோகிராபர் அகில் பக்ஷியின் புகைப்படம், பேஷன் நடன வடிவமைப்பாளர் அஜீத் மேனன் கைக்குப் போய், அவர் மூலம் சுந்தர்.சியை வந்தடைந்ததாம்.

பார்த்தவுடனேயே சுந்தருக்கு அதிதியை பிடித்து விட்டதாம். குஷ்புவும் பார்த்து ஓ.கே. சொல்ல நாயகியாகியுள்ளார் அதிதி.

நடிக்க வந்த புதிதில் சென்னை எப்படி இருக்குமோ, சென்னை சினிமாக்காரர்கள் எப்படி இருப்பார்களோ என்ற பயம் இருந்ததாம். ஆனால் இப்போது பயம் சுத்தமாக போய் விட்டதாம்.

அதை விட முக்கியமாக காதல் காட்சிகள் உள்ளிட்டவற்றில் நடிக்க ரொம்பவே வெட்கப்படுவாராம் ஆரம்பத்தில். ஆனால் இப்போது வெட்கம் கொஞ்சம் போல விலகியுள்ளதாம்.

நடிப்பதற்கு சுந்தர்.சி. உதவியாக இருக்கிறாராம். பல விஷயங்களை சொல்லிக் கொடுத்துள்ளாராம். நடிக்க ஆரம்பித்த சில நாட்களுக்கு தமிழ் சுத்தமாக புரிபடவில்லையாம். ஆனால் இப்போது வார்த்தைகள் புரிய ஆரம்பித்துள்ளதாம். விரைவிலேயே 'பேமானி, கய்தே, கஸ்மாலம்' ரேஞ்சுக்கு தமிழில் சிறப்பாக பேசுவேன் என்று தைரியமாக கூறுகிறார்.

தமிழில் நிறையப் படங்கள் நடிக்க வேண்டும் என்பதுதான் அதிதியின் முக்கிய ஆசையாம்.

தமிழில் அவருக்குப் பிடித்த நடிகர்கள் மூன்று பேர். ஒருவர் ரஜினி, இன்னொருவர் கமல். லேட்டஸ்டாக விஜய்யின் ரசிகையாகவும் மாறியுள்ளார்.

பொழச்சுக்குவார்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X