For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  நமீதாவுக்கு ஆச்சா...?

  By Staff
  |

  Namitha
  கோலிவுட்டின் 'கிளாமர் சைக்லோன்' நமீதாவுக்கு திருமணமாகிவிட்டதாக பரபரப்பாக கிசுகிசுக்கப்படுகிறது. நமீதாவிவின் கவர்ச்சியை விட இந்த மேட்டர்தான் இப்போது படு ஹாட் ஆக பேசப்பட்டு வருகிறது.

  இது குறித்து நமீதாவே தனது வாயால் விளக்கியுள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டி:

  எப்போதும் பரபரப்பான செய்தி வளையத்துக்குள்ளேயே இருக்கும் முயற்சிதான் உங்களை இப்படியெல்லாம் குறைந்தபட்ச உடையில் வலம் வர வைக்கிறதா?

  என்ன உடை போட்டுக் கொள்வது என்பதை நான்தான் முடிவு செய்ய வேண்டும். எனக்கு இம்மாதிரி குறைந்த உடையில் வருவதுதான் பிடிச்சிருக்கு. வசதியாவும் இருக்கு. புடவை கட்டினால் கசகசவென்று என்னை ரொம்ப கஷ்டப்படுத்துது. ஆனால் இதுக்காக நீங்கள் எல்லாம் ஏன் இவ்வளவு கஷ்டப்படறீங்கன்னு தெரியல...

  ஆனா, நீங்க உடை அணியற விதம் பொது அமைதிக்கு கேடு விளைவிப்பதாய் உள்ளதாக, சட்டசபையில் முதல் முன்னிலையிலேயே விவாதிக்கப்பட்டிருக்கு. இருந்தும் நீங்கள் மாற்றிக் கொள்ளவில்லையே...?

  நான் எதையும் வேண்டுமென்றே செய்யவில்லை. எனக்கு வசதியான, பிடித்தமான விஷயங்களைச் செய்கிறேன். அது மற்றவர்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் நான் என்ன செய்வது? சரி, இனிமேல் உடை விஷயத்தில் கூடுதலாக கவனம் செலுத்துவேன்.

  படங்களில் நடிப்பதைவிட இம்மாதிரி வணிக விளம்பரங்களில் தோன்றவே நீங்கள் அதிக ஆர்வம் காட்டுவது போல் தெரிகிறதே...?

  இல்லையில்லை... இப்போது தமிழில் அதிக அளவு படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன். கிட்டத்தட்ட 8 படங்கள். இடையில் இம்மாதிரி விளம்பரங்களில் நடிப்பது எனக்கே பிடித்திருக்கிறது. இதில் ஒருவித ஓய்வு கிடைக்கிறது எனக்கு. அதேபோல பொது மக்களைச் சந்தித்துப் பழகும் வாய்ப்பும் கிடைக்கிறது. அதுதான் சந்தோஷம்.

  தொடர்ந்து எல்லா படங்களிலும் ஒரு கவர்ச்சி ஆட்டம் மற்றும் சில காட்சிகளில் வருவது போன்ற வழக்கமான வேடம்தான் உங்களுக்கு கொடுக்கப்படுகிறது. இது உங்களுக்கே சலிப்பு தட்டவில்லையா...?

  அதுக்கு நான் என்ன பண்ண முடியும். அந்த வேடங்களில் நான் நடிக்காவிட்டால் வேறு யாராவது நடித்துவிட்டுப் போகிறார்கள். நஷ்டம் எனக்குத்தானே. நல்ல வேடங்கள் கொடுத்துப் பாருங்கள், நான் யாரென்று காட்டுகிறேன். இப்போது நான் நடிக்கும் இந்திரவிழாவில் எனக்கு நல்ல வேடம். கவர்ச்சி, நடிப்பு இரண்டும் சரிவிகிதத்தில் கலந்த வேடம் அது.

  தொடர்ந்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்களா...?

  மானாட மயிலாட நிகழ்ச்சியில் நான் கலந்து கொண்டது, கலைஞர் டிவிக்காக. மற்றபடி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க எனக்கு நேரமிருப்பதில்லை. மானாட மயிலாட மாதிரி நிகழ்ச்சி என்றால், எனக்கு இருக்கும் நேரத்தைப் பொறுத்து பங்கேற்பதா வேண்டாமா என்பதை முடிவு செய்வேன்.

  சரி, ஒரு முக்கியமான கேள்வி.... உங்களுக்கு கல்யாணமாகிட்டதா சொல்றாங்களே...?

  அதுமட்டுமா.. விட்டா எனக்குக் குழந்தையிருக்குன்னு கூடச் சொல்வாங்க. பரபரப்புக்காக என்ன வேணும்னாலும் சொல்லலாமா.. என் கல்யாணத்தை நேரம் வரும்போது எல்லாருக்குமே தெரிவிப்பேன். அதுவரைக்கும் அதப்பத்தி யாரும் பேசாம இருந்தா சந்தோஷம். எனக்கும் அப்பா, அம்மா, குடும்பம் இருக்கு.

  ஆச்சா, இல்லையா என்பதை நமீதா தெளிவாக விளக்கவில்லை. ஆனால் இல்லை என்று அவர் கூறவும் இல்லை. எனவே நமீதா திருமதியா அல்லது பக்கா செல்வியா என்பது குழப்பமாகவே உள்ளது. பட்டென்று போட்டு உடைப்பாரா நமீதா?

  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X