சிம்ரனுக்கு இது மறக்க முடியாத தீபாவளி!

அவர் முக்கிய வேடங்களில் நடித்த இரு பெரிய படங்கள் இந்த தீபாவளி மற்றும் அதற்கடுத்த வாரத்தில் அடுத்தடுத்து வெளியாகின்றன.
ஹரியின் இயக்கத்தில் தயாராகியுள்ள சேவலில் ஹீரோயினுக்குச் சமமான வேடத்தில் நடித்துள்ளார் சிம்ரன். ஹீரோ பரத்துடன் டூயட்டுக்கும் ஆட்டம் போட்டுள்ளார். இந்தப் படம் தீபாவளிக்கு ரிலீசாகிறது.
அடுத்து தனது முதல் கதாநாயகன் சூர்யாவுடன் அவர் நடித்துள்ள வாரணம் ஆயிரம். முதலில் இந்த தீபாவளிக்கு வெளியாகும் என்றுதான் அனைவரும் எதிர்பார்த்தார்கள். ஆனால் தனியாக ரிலீஸானால்தான் வசூலை அள்ள முடியும் என்று தயாரிப்பாளர் கருதியதால், ஏரியா விற்கவில்லை என்று காரணம் கூறி நிறுத்தி விட்டனர்.
இந்தப்படம் 14-ம் தேதி ரிலீசாகிறது. வயதான கெட்டப்பில் வரும் சூர்யாவுக்கு ஜோடியாக இந்தப் படத்தில் நடித்துள்ளார் சிம்ரன்.
இனி எனக்கு எல்லாமே நல்லவிதமாக அமையும் என்ற நம்பிக்கை இருக்கிறது. சேவல், வாரணம் ஆயிரம் இரண்டுமே அசத்தலான பட்ஙகள். பெரிய ப்ரேக் தரும் என்கிறார் பூரிப்புடன் சிம்ரன்.


Click it and Unblock the Notifications











