கார்த்திகா-தீபுவின் 'தைரியம்'!

தூத்துக்குடி மூலம் நாயகியானவர் கார்த்திகா. அதன் பின்னர் ஓரிரு படங்களில் தலை காட்டியுள்ளார். சமீபத்தில் ரிலீஸான ராமன் தேடிய சீதை படத்தில் ஐந்து நாயகிகளில் ஒருவராக நடித்திருந்தார். பாலாவின் நான் கடவுள் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தும் திருப்தி இல்லாததால் படத்திலிருந்து நீக்கப்பட்டார்.
அதேபோல என் மன வானில் படத்தில் சின்ன கேரக்டரில் வந்து போன தீபு பின்னர் தனி நாயகியானார். எம். குமரன் சன் ஆப் மகாலட்சுமியில் ஜெயம் ரவியின் தங்கையாக நடித்தார். தொடர்ந்து தமிழில் சரிவர வாய்ப்புகள் இல்லாததால் கன்னடத்திற்கு மாறினார். அங்கு தீபுவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால் தொடர்ந்து கன்னடத்திலேயே கலக்கிக் கொண்டிருந்தார்.
இந்த நிலையில் ரீ என்ட்ரியாக தமிழுக்கு தைரியம் மூலம் வருகிறார் தீபு.
அதேபோல பிரேக் இல்லாமல் போய்க் கொண்டிருக்கும் தனது மார்க்கெட்டுக்கு தைரியம் நல்ல வாய்ப்பாக அமையும் என்ற நம்பிக்கையில் இப்படத்தில் தலை காட்டுகிறார் கார்த்திகா.
இருவருக்கும் ஒரே ஹீரோ. அவர் புதுமுகம் குமரன். படத்தில் முன்னாள் நாயகி பிரகதியும் உண்டு. ரேகாவும் இருக்கிறார். படம் ஜனரஞ்சகமாக இருக்குமாம்.
அப்ப தைரியமா எடுங்க.


Click it and Unblock the Notifications











