மீண்டும் கதாநாயகியான கஸ்தூரி!

ஆத்தா உன் கோயிலிலே படத்தில் குடும்பப் பாங்கினியாக அறிமுகமாகி, பின்னர் வாய்ப்புகள் இல்லாத நிலையில் காபரே லெவலுக்கு இறங்கி தாராளம் காட்டிய கஸ்தூரி, ஒரு கட்டத்தில், வேண்டாம் சினிமா என்று விலகிச் சென்றார்.
இனி தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தயாரிப்பேன் என்று கூறினார். பின்னர் பத்திரிகையாளராகிவிட்டேன் என்றார். திடீரென ஒருநாள் புதிதாக இணையதளம் தொடங்கியிருப்பதாகவும் கூறினார்.
ஆனால் ஒன்றில் கூட அவர் நிலைக்கவில்லை. பார்த்தார்... பழகிய தொழிலுக்கே திரும்பிவிட்டார். இப்போது நூத்துக்கு நூறு எனும் படத்தில் நடிக்கிறாராம். பழைய நூற்றுக்கு நூறு ரீமேக்தான் இது. விரிவுரையாளர் வேடத்தில் நடிக்கிறாராம். இவரைத் தவிர இந்தப் படத்தில் மேலும் 4 நாயகிகள் உண்டாம்.
இதுகுறித்து கஸ்தூரி கூறுகையி்ல்,
நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்துள்ளேன். நூத்துக்கு நூறு படத்தில் கதையும் கேரக்டரும் பிடித்திருந்தது. சம்மதித்தேன்.
இதையடுத்து காதல் டூ கல்யாணம் படத்தில் நாகேந்திர பிரசாத் ஜோடியாக நடிக்கிறேன். தொடர்ந்து நல்ல கதைகள் அமைந்தால் நடிப்பேன். ஒரு பாடலுக்கு ஆட சில படங்களில் அழைத்தார்கள். மறுத்துவிட்டேன். பெரிய நடிகர்களின் படங்கள் என்றால் ஆடலாம். சாதாரண படங்களில் என்றால் வேண்டாம்.
அக்கா, அண்ணி கேரக்டர்களில் நடிப்பீர்களா? என்கிறார்கள். அந்தந்த கேரக்டர்களின் முக்கியத்துவத்தை பொறுத்தே என் முடிவு இருக்கும். தொடர்ந்து நல்ல கதையம்சம் உள்ள படங்களில் நடிக்கவே ஆர்வமாக இருக்கிறேன் என்றார்.


Click it and Unblock the Notifications











