விவாகரத்தை நாடியுள்ள காவ்யா மீண்டும் நடிக்க வருகை

எங்காவது ஒரு மூலையில் சின்னதாக உற்பத்தியாகி பிறகு பெரிய பெரிய ஆறுகளாக வி்ஸ்வரூபம் எடுத்து கடைசியில் கடலில் போய் கலப்பது போல, மலையாளத்திலிருந்து கிளம்பி, தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என போய் விடுவது மலையாள நடிகைகளின் வழக்கம். சிலர் வித்தியாசமாக இருந்த இடத்திலேயே தொடர்ந்து உலா வருவார்கள்.
அப்படிப்பட்ட நடிகைகளில் ஒருவர்தான் காவ்யா மாதவன். தொடர்ந்து மலையாளப் படங்களிலேயே நடித்து வந்தார். அவ்வப்போது தமிழுக்கு வந்து போனார். இருந்தாலும் நிரந்தரமாக மலையாள நடிகையாகவே இருந்து வந்தார்.
அதேசமயம், ஆசின், நயனதாரா, பிரியங்கா, பாவனா, ரம்யா நம்பீசன், மமதா, பாமா, ரோமா, கார்த்திகா ஆகியோர் மலையாளத்திலிருந்து கிளம்பி பிற மொழிப் படங்களில்தான் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
இதனால் மலையாளத்தி்ல இப்போது நாயகிகளுக்கு நல்ல பஞ்சம். இந்த நிலையில்தான் பேருபகாரமாக மீண்டும் நடிக்க வந்துள்ளார் காவ்யா மாதவன்.
கல்யாணம் செய்து கொண்டு செட்டிலான காவ்யா அதே வேகத்தில் விவாகரத்துக்குப் போய் விட்டார் என்பது நினைவிருக்கலாம்.
இந்த நிலையில் தற்போது கல்யாண கசப்பை மறக்க நடிப்புக் கடலுக்கு மீண்டும் திரும்பியுள்ளாராம். கிறிஸ்டியன் பிரதர்ஸ் என்ற படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுக்கிறார் காவ்யா.
காவ்யாவுக்கு இன்னும் மார்க்கெட் குறையாமல், வலுவாக உள்ளதால், அவரை நடிக்க வைக்க பெரும் கிராக்கி ஏற்பட்டுள்ளதாம். இதனால் மறுபடியும் ஒரு ரவுண்டு அடிக்க ஆர்வத்துடன் காத்திருக்கிறார் காவ்யா.


Click it and Unblock the Notifications











