ப்ளஸ் டூ தேர்வு எழுதும் காவ்யா மாதவன்!

பிரபல நடிகை கவ்யா மாதவன் சிறு வயதிலேயே நடிக்க ஆரம்பித்து விட்டார். 8-ம் வகுப்பு படிக்கும் போது நடிகர் திலீப்புடன் சத்திரன் உதிக்குன்ன திக்கில் என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். இந்த படம் வெற்றி பெற்றதால் தொடர்ந்து பல படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது.
பத்தாம் வகுப்பு வரை படித்துக் கொண்டே படத்தில் நடித்து வந்த கவ்யா மாதவன் பின்னர் பள்ளிக்கு முழுக்கு போட்டு விட்டு முழு நேரம் சினிமாவில் கவனம் செலுத்தினார்.
இந்த நிலையில் 2 ஆண்டுகளுக்கு முன் அவருக்கு திருமணம் நடந்தது. திருமண வாழ்க்கை தோல்வியில் முடிந்தது. தற்போது அவருடைய விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில் கவ்யா மாதவனுக்கு படிப்பில் திடீர் ஆர்வம் வந்துள்ளது. அவர் திறந்த வெளி பள்ளியில் சேர்ந்து பிளஸ் 2 படித்து வருகிறார். அவருக்கு நேற்று தேர்வு தொடங்கியது. முதல் தாளான ஆங்கில தேர்வு நேற்று நடந்தது.
எர்ணாகுளம் எடக்கனாவில் உள்ள பள்ளியில் அவர் தேர்வு எழுத வந்தார். தேர்வு முடிந்ததும் கவ்யா மாதவன் யாருடனும் பேசாமல் வேகமாக காரில் ஏறி வீட்டுக்கு சென்றார். அவரைக் காண எக்கச்சக்கமாகக் கூட்டம் கூடியது. மாணவ மாணவிகள் பலரும் இவரை வேடிக்கைப் பார்க்கக் குவிந்துவிட்டனர்.


Click it and Unblock the Notifications











