குத்து பாட்டு வேண்டாம்- கீர்த்தி

நல்ல அழகு, அட்டகாசமான டான்ஸ் திறமை என அனைத்தும் இருந்தும் தமிழில் சரியான பிரேக் கிடைக்காமல் இருக்கிறார் கீர்த்தி சாவ்லா.
இத்தனைக்கும் அவரது கை நிறையப் படம் உள்ளது. இருந்தாலும் பிரபலமான நடிகையாக இன்னும் அவர் பேசப்படாத நிலை. இந்த வருத்தம் நம்மைப் போலவே கீர்த்தியிடமும் நிறைய உள்ளது.
எனது முயற்சிகளின் நான் திருப்தியாகவே உள்ளேன். பிரேக் வரும்போது வரட்டும் என்கிறார்.
தற்போது மன்மத ராஜ்ஜியம், அகராதி, திருமதி தமிழ், ஸ்வேதா 5/10வெல்லிங்டன் ரோடு, நினைவில் நின்றவள் என படு பிசியாக உள்ளார் கீர்த்தி.
ஹீரோயின் வாய்ப்புதான் சரியாக வரவில்லையே, குத்துப் பாட்டுக்கு ஆடுவீர்களா என்று கேட்டால் கண்டிப்பாக மாட்டேன். அதை நான் விரும்பவில்லை என்கிறார் திட்டவட்டமாக.
Comments


Click it and Unblock the Notifications