இதோ, இன்னொரு ஹீரோ

By Staff

Janani
இயக்குநர் விஷ்ணுவர்த்தனின் தம்பி கிருஷ்ணா ஹீரோவாகிறார். அலிபாபா படம் மூலம் நடிக்க வருகிறார் கிருஷ்ணா.

இளம் இயக்குநர் விஷ்ணுவர்த்தனே பார்க்க ஹீரோ சாயலில்தான் இருக்கிறார். இந்த நிலையில் தனது தம்பி கிருஷ்ணாவை ஹீரோவாக்கியுள்ளார் விஷ்ணு.

அலிபாபா என்ற படம் மூலம் நாயகனாகிறார் கிருஷ்ணா. விஷ்ணுவிடம் உதவியாளராக இருந்த நீலன் ஜி.சேகர், இப்படத்தை இயக்கவுள்ளார்.

சண்டிகரைச் சேர்ந்த அழகிய ஜனனி இப்படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார். இவரது இயற்பெயர் ஷெரீன். ஆனால் ஏற்கனவே இப்பெயரில் ஒரு அழகிய ராட்சசி இருப்பதால், சண்டிகர் அழகியின் பெயரை ஜனனி என மாற்றி விட்டனர்.

ஜனனிக்கு கேமரா புதிதில்லையாம். ஏற்கனவே சில விளம்பரப் படங்கள் தலை காட்டியுள்ளாராம்.

படத்தில் பிரகாஷ் ராஜ், மலையாளத்து திலகன், பிஜு மேனன் ஆகியோரும் உள்ளனர்.

கிருஷ்ணா எம்.பி. ஏ படித்தவர். மணிரத்தினத்தின் அஞ்சலி படத்தில் குட்டிப் பையனாக வந்தவர்களில் இவரும் ஒருவராம்.

படம் குறித்து இயக்குநர் சேகர் கூறுகையில், இந்தப் படத்தின் கதைக்கு கிருஷ்ணதான் பொருத்தமான நாயகன். அவர் அமெரிக்காவில் எம்.பி.ஏ படித்தபோது பல தமிழ் மற்றும் பிரெஞ்சு நாடகங்களில் நடித்துள்ளார். திறமையான ஒளிப்பதிவாளரும் கூட என்றார்.

கிருஷ்ணா நல்ல டான்சரும் கூடவாம். வேட்டையாடு விளையாடு படத்தில் கமலுக்காக ஒரு நடனத்தையும் வடிவமைத்துள்ளாராம்.

எல்லாம் சரி, அலிபாபா என்ற பெயர் வைக்க என்ன காரணம் என்று சேகரிடம் கேட்டால், விசேஷமாக எதுவும் இல்லை. பிடித்த மாதிரி இருந்தது வைத்து விட்டோம். அதிர்ஷ்டக்காரன் என்ற அர்த்தம் வருவது போலவும் தெரிந்ததால் அதை வைத்துள்ளோம் என்றார்.

வித்யாசாகர் இசையமைக்கிறார். கிருஷ்ண, விஷ்ணுவின் தந்தையான பட்டியல் சேகர்தான் இப்படத்தை தயாரிக்கிறார். ஜூன் இறுதியில் படம் திரைக்கு வருகிறதாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X