twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கமல்-கிஸ்-மீனாட்சி!

    By Staff
    |

    Meenakshi
    எனது உதடுகள் அழகானவை என்று பல ஆண்கள் கூறியிருக்கிறார்கள். இதுவரை சினிமாவில் முத்தக் காட்சியில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. கிடைத்தால் நடிப்பேன். அதிலும் கமல்ஹாசனுடன் முத்தக் காட்சியில் நடிக்கும் வாய்ப்பு வந்தால் உடனே ரெடி என்கிறார் கருப்பசாமி குத்தகைதாரர் புகழ் மீனாட்சி பகிரங்கமாக ஸ்டேட்மென்ட் விட்டுள்ளார்.

    கொல்கத்தா கண்ணழகி மீனாட்சி, கருப்பசாமி குத்தகைதாரர் மூலம் தமிழுக்கு வந்த தங்கச்சிலை. முதல் படத்திலேயே நடிப்பாலும், நடனத்தாலும் அனைவரையும் கவர்ந்திழுத்த மீனாட்சி, இடையில் சின்ன கேப் விட்டு, இப்போது கை நிறையப் படங்களுடன் நயனதாராக்களையும், திரிஷாக்களையும் நடு நடுங்கவைக்க வருகிறார்.

    லாரன்ஸுடன் ராஜாதி ராஜா, பெருமாள், த.நா. 07 ஏ.எல்.4777 உள்பட பல படங்கள் மீனாட்சி கைவசம். சந்தோஷப் பூரிப்புடன் இந்தப் பட்டியலை வெளியிட்ட மீனாட்சி செய்தியாளர்களிடம் பல சமாச்சாரங்களையும் பகிர்ந்து கொண்டார்.

    எனக்கு கண்களும், உதடுகளும் வெகு அழகு என்று பலரும் கூறியிருக்கிறார்கள். குறிப்பாக ஆண்கள்தான் நிறையப் புகழ்ந்துள்ளனர். உதடுகள் அழகாக இருந்தால் உடனே முத்தக் காட்சி வைத்து விடுவார்கள். ஆனால் எனக்கு இதுவரை அப்படி வாய்ப்பு அமையவில்லை.

    முத்தக் காட்சியில் நடிக்கும் வாய்ப்பு வந்தால் தாராளமாக நடிப்பேன். அதிலும் கமல்ஹாசனுடன் நடிக்கும் வாய்ப்பு வந்தால் உடனே தயார்.

    எனக்கு கிளாமர் காட்டுவதில் எதிர்ப்பு கிடையாது. அதற்கு நான் பொருத்தமாக இருக்க வேண்டும். எனக்கு நீச்சல் உடை போட்டால் பொருத்தமாக இருக்காது. எனவே அப்படி நான் நடிக்க மாட்ேடன்.

    விதம் விதமான கேரக்டர்களில் நடிக்க ஆசையாக இருக்கிறேன். நல்ல
    கதாபாத்திரம் கிடைக்க வேண்டும். நடிப்புக்கு நல்ல வாய்ப்பு வேண்டும்.

    இதுவரை கல்யாணமான ஹீரோக்களுடனேயே நடித்து வருகிறேன். எனவே எனக்கு எந்தப் பிரச்சினையும் வரவில்லை. பாதுகாப்பாகவும் இருக்கிறது என்கிறார் மீனாட்சி.

    நிறைய தமிழ்ப் படங்களில் நடிக்க வேண்டும். தமிழ் ரசிகர்களின் இதயங்களில் இடம் பிடிக்க வேண்டும் என்பதுதான் மீனாட்சியின் லட்சியமாம்.

    மீனாட்சிக்கு இப்போது வயது 21 நடக்கிறதாம். 30 வரைதானாம் நடிப்பு. பிறகு செட்டிலாகி விடுவாராம்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X