கால்ஷீட் பிரச்சினை: ஷங்கர் படத்திலிருந்து மீரா நீக்கம்!

By Staff

Meera Jasmine
இயக்குனர் ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் தயாரிக்கும் அனந்தபுரத்து வீடு படத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளார் மீரா ஜாஸ்மின்.

காதல், வெயில், கல்லூரி பட வரிசையில் இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில் நாகா இயக்கும் அனந்தபுரத்து வீடு படத்தில் நடிக்க மீரா பெரும் சம்பளத்துக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்.

இப்படத்துக்கு தொடர்ச்சியாக 30 நாட்கள் கால்ஷீட் தந்திருந்த மீரா, வழக்கம்போல் சில தினங்களுக்குப் பிறகு அவர் படப்பிடிப்புக்கு வராமல் போனதால், படத்தை விட்டே இப்போது நீக்கப்பட்டுள்ளார்.

இப்போது புதிய கதாநாயகியை அறிமுகப்படுத்தலாமா, அல்லது ஏற்கெனவே உள்ள யாரையாவது ஒப்பந்தம் செய்யலாமா என யோசித்துக் கொண்டிருக்கிறார் இயக்குநர் நாகா.

குறித்த நேரத்துக்கு படப்பிடிப்பு வராதது மற்றும் கால்ஷீட் பிரச்சினை காரணமாகவே மீரா இப்படத்திலிருந்து தூக்கப்பட்டதாக இயக்குநர் நாகா தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே இதே போன்ற பிரச்சினைகளுக்காக சொந்த மொழியான மலையாள சினிமா உலகத்திலிருந்தே விலக்கி வைக்கப்பட்டிருப்பவர் மீரா.

மோகன்லால், திலீப் போன்ற முன்னணி நடிகர்களே மீராவை தங்கள் படங்களில் போடக் கூடாது எனக் கூறி வருகின்றனர்.

மலையாள நடிகர்கள் சங்கமான அம்மாவும் மீரா ஜாஸ்மினுக்கு தடை விதித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X