'வால்மீகி' மீரா நந்தன்!

வந்தாரை வாழ வைக்கும் தமிழ் சினிமா, தன் தேசம் தவிர்த்து பிற தேசத்து நாயகர்களுக்கும், நாயகிகளுக்கும் ஏற்றம் கொடுக்கத் தவறியதில்லை. திறமையும், அழகும் நிறைந்த நாயகிகள் பலர் தமிழ் சினிமாவுக்கு வந்து பெரிய இடத்திற்குப் போயிருக்கிறார்கள்.
சமீப காலமாக மலையாளத்திலிருந்துதான் நிறைய நாயகிகள் தமிழில் அறிமுகமாகியுள்ளனர். அந்த வரிசையில் புதிதாக இணைகிறார் மீரா நந்தன்.
மஞ்சள் கிழங்கு போல பளிச்சென இருக்கும் மீரா, மலையாளத்தில் முல்லா படத்தின் மூலம் ஹிட் ஆனவர். புன்னகை தேசமாய் அழகாக காணப்படும் மீரா நந்தன், முல்லா படத்திலேயே முத்திரை பதித்ததால் அவரைத் தேடி தமிழிலிருந்தும் வாய்ப்புகள் தேடி போக ஆரம்பித்துள்ளன.
தமிழில் வால்மீகி என்ற படத்தில் அறிமுகமாகிறார். அனந்த நாராயணன் இயக்கும் இப்படத்தில், அகில் நாயகனாக நடிக்கிறார். கல்லூரி படத்தின் நாயகன்தான் இந்த அகில். இசைஞானி இளையராஜா இசையமைக்கவுள்ளார்.
மீராவுக்கு இந்தப் படம் தவிர பூபதி பாண்டியன் இயக்கத்திலும் ஒரு படம் புக் ஆகியுள்ளதாம்.
நயனதாரா, ஆசின், மீரா ஜாஸ்மின் வரிசையில் இந்த மீரா இணைவாரா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications











