சினிமாவுக்கு வந்த 'மிஸ் இந்தியா அமெரிக்கா'
2007ம் ஆண்டு மிஸ் இந்தியா அமெரிக்காவாக தேர்ந்தெடுக்கப்பட்ட ரிச்சா கங்கோபாத்யாயா தெலுங்கு மூலமாக இந்தியில் அறிமுகமாகியுள்ளார்.
தெலுங்கில் ஏவி.எம். தயாரிக்கும் படம் லீடர். இந்தப் படத்தையே இந்தியிலும் கொண்டு வருகிறார்கள். இதில், ராணா என்ற புதுமுகத்துக்கு ஜோடியாக ரிச்சா நடிக்கிறார். இந்தப் படத்தை சேகர் கம்முலா இயக்குகிறார்.
இப்படத்தில் சுஹாசினியும் இருக்கிறார். அரசியல் பின்புலம் கொண்ட அதிரடி ஆக்ஷன் கதையாம் இப்படம். ராணா இப்படத்தில் அரசியலில் மிகப் பெரிய இடத்தை அடையும் லட்சியத்துடன் போராடும் இளைஞராக வருகிறாராம். படத்தில் இரண்டு நாயகிகள். அவர்களில் ஒருவர் ரிச்சா. இன்னொருவர் தெலுங்குப் பட நாயகி.
டாலர் டிரீம்ஸ், ஆனந்த், கோதாவரி, ஹேப்பி டேஸ் ஆகிய தெலுங்குப் படங்களைக் கொடுத்தவர் சேகர் கம்முலா. அனைத்துமே புதுமுகங்களை வைத்து எடுக்கப்பட்ட படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அத்தனையும் சூப்பர் ஹிட் படங்களும் கூட.
மேலும் கம்முலா படத்தின் மூலமாகத்தான் தமன்னா, கமாலினி முகர்ஜி ஆகியோர் தெலுங்கில் ஹிட் நாயகிககளானார்கள். தமன்னாவுக்கு ஹேப்பி டேஸ் பெரும் பிரேக் கொடுத்தது. அதை வைத்துதான் தற்போது அவர் தமிழில் கலக்கிக் கொண்டிருக்கிறார்.
இந்த வரிசையில், ரிச்சாவும் ரிச் நாயகியாவாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











