'திகில்' நாயகி முமைத்!

குத்துப் பாட்டுக்கள் மூலம் தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களை குஷியூட்டியவர் முமைத்கான். ஆனால் தெலுங்கில் எதிர்பாராதவிதமாக நாயகியாக நடிக்கும் வாய்ப்பு வந்ததால் ஹீரோயினாகி விட்டார்.
இதன் காரணமாக முன்பு போல அவர் வருகிற குத்துப் பாட்டுக்களையெல்லாம் ஒப்புக் கொள்வதில்லை. ஹீரோயினாகவும் கலக்கி வருகிறார்.
இந்த நிலையில், திகில் கதையான பெளர்ணமி நாகம் என்ற படத்தில் திரில் கேரக்டரில் ஹீரோயினாக நடிக்கிறார் முமைத்கான்.
நாகத்தை அடிப்படையாகக் கொண்ட கதை என்பதால் கிளாமர் நடனமும் நிறைய வைத்திருக்கிறார்களாம் முமைத்துக்கு.
கிராபிக்ஸ் கலக்கல் நிறைந்த படமாக இது இருக்கும். யார் கண்ணன் படத்தை இயக்குகிறார்.
Comments


Click it and Unblock the Notifications