'பையா': நடிகர் சங்கத்தில் நயனதாரா புகார்!

இதுகுறித்து நயனதாரா மீது தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி நேற்று புகார் கொடுத்தார். அதை எதிர்த்து நடிகர் சங்கத்தில் நயனதாரா புகார் கொடுத்துள்ளார்.
நயனதாரா- கார்த்தி ஜோடியாக நடிக்க, லிங்குசாமி டைரக்ஷனில் பையா என்ற படம் தயாரிப்பதாக இயக்குநர் லிங்குசாமி அறிவித்தார். இந்தப் படத்தை அவரே இயக்குவதாகவும் அறிவிக்கப்பட்டது.
இந்த படத்துக்காக நடிகை நயனதாராவுக்கு ரூ.1.25 கோடி சம்பளம் பேசப்பட்டது. இந் நிலையில், நயன்தாரா சம்பளத்தைக் குறைத்தால்தான் படப்பிடிப்பு தொடங்க முடியும் என்று தயாரிப்பாளர் தரப்பில் நிபந்தனை விதிக்கப்பட்டது. இந்த நிபந்தனையை ஏற்க நயனதாரா மறுத்துவிட்டார். இதைத் தொடர்ந்து அவர் அந்த படத்தில் நடிக்கவில்லை என்று அறிவிக்கப்பட்டது. அவருக்கு பதில் தமன்னா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
நயனதாரா புகார்:
இந் நிலையில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் பட அதிபர் சுபாஷ் சந்திரபோஸ் நேற்று ஒரு புகார் கொடுத்தார். அதில், எங்களது பையா படத்தில் நடிப்பதற்காக நயனதாரா ரூ.15 லட்சம் அட்வான்ஸ் வாங்கியிருந்தார். இப்போது அவர் இந்த படத்தில் நடிக்கவில்லை. என்றாலும் அவர் அட்வான்ஸ் தொகையை திருப்பி தரவில்லை. அவரிடமிருந்து அட்வான்ஸ் தொகையை திரும்ப பெற்று தர வேண்டும் என்று கூறியிருந்தார்.
இதைத் தொடர்ந்து நடிகை நயனதாராவும் தென்னிந்திய நடிகர் சங்கத்தில் ஒரு புகார் கொடுத்தார். அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது:
பையா படத்தில் நடிப்பதற்காக நான் மூன்று மாதங்களாக காத்திருந்தேன். அந்த சமயத்தில் பட அதிபர் சொன்னபடி படப்பிடிப்பு தொடங்கவில்லை. இந்த நிலையில், சம்பளத்தை குறைத்தால்தான் படப்பிடிப்பு நடத்த முடியும் என்று அவர் என்னை பிளாக்மெயில் செய்தார்.
நான் மூன்று மாதங்களாக காத்திருந்ததால் வேறு படங்களில் நடிக்க முடியவில்லை. இதனால் எனக்கு பல லட்சங்கள் இழப்பு ஏற்பட்டது. எனக்கு நஷ்டஈடு கொடுத்தால் நான் வாங்கிய அட்வான்ஸ் தொகையை திருப்பி கொடுத்து விடுகிறேன் என்று கூறியுள்ளார்.
இந்த இரு புகார்கள் குறித்தும் இன்று நடிகர் சங்கமும் தயாரிப்பாளர் சங்கமும் விசாரணை நடத்தி முடிவை அறிவிக்க உள்ளனர்.


Click it and Unblock the Notifications











