Don't Miss!
- Finance
இந்தியர்களுக்குச் சிவப்பு கம்பள வரவேற்பு.. ரஷ்யாவின் புதிய கோல்டன் விசா..!
- News
மீண்டும் வண்டியை ஈரோட்டுக்கு விட்ட ஈபிஎஸ்.. உங்க பூத்ல நிலவரம் என்ன? பொறுப்பாளர்களுடன் மீட்டிங்!
- Sports
ஆஸி.யை வீழ்த்த 2 செய்தால் போதும்.. ரோகித் படைக்கு முன்னாள் கேப்டன் இயன் சேப்பல் அறிவுரை
- Lifestyle
February Horoscope 2023: பிப்ரவரி மாசம் இந்த ராசிக்காரங்க ரொம்ப கஷ்டப்பட போறாங்க.. உங்க ராசி இதுல இருக்கா?
- Automobiles
ஐஆர்சிடிசில பஸ் டிக்கெட் புக் பண்ணா இவ்வளவு லாபமா? எப்படி பண்ணணும் தெரியுமா?
- Technology
Oppo: வெயிட்டான கேமரா செட்டப்.. கதகளி ஆடப்போகும் புதிய ஒப்போ போன்.. பிப்.3-ல் அறிமுகம்!
- Travel
ரயில் பயணிகளின் கவனத்திற்கு – சுவையான உணவுகளுடன் திருத்தப்பட்ட IRCTCயின் மெனு!
- Education
பகுதி சுகாதார செவிலியர் பணி 2023:'ரூ.18 ஆயிரத்தில் நர்ஸ் வேலை'...!
மயங்கி விழுந்த பிரியங்கா சோப்ரா

இந்தி திரையுலக தேவைதகளில் ஒருவரான பிரியங்கா சோப்ரா படு பிசியான முன்னணி நடிகை. கடந்த சில நாட்களாக தோஸ்தானா ஷூட்டிங் மற்றும் லவ் ஸ்டோரி 2050 படத்தின் புரமோஷனல் பயணங்களில் கலந்து கொண்டு வருகிறார்.
இதன் காரணமாக அவருக்கு ஓய்வே இல்லாத நிலை. கடந்த ஒரு வாரமாக மும்பை பிலிம் சிட்டியில் நடந்து வரும் படப்பிடிப்பில் பிரியங்கா சோப்ரா பங்கேற்று நடித்து வருகிறார். அவருக்கு ஆஸ்தமா தொல்லை உண்டு.
இந்த நிலையில் உடல்நலனைப் பொருட்படுத்தாமல் ஷூட்டிங்கில் கலந்து கொண்ட பிரியங்காவுக்கு, திடீரென ஆஸ்த்மா அதிகமாக மயக்கம் வந்து விட்டது. படப்பிடிப்புத் தளத்திலேயே அவர் மயங்கி விழுந்தார்.
அப்போது அபிஷேக் பச்சன், ஜான் ஆப்ரகாம், காதலர் ஹர்மான் பவேஜா உள்ளிட்டோர் அருகில் இருந்தனர்.
உனடியாக டாக்டர் வரவழைக்கப்பட்டு ஊசி போடப்பட்டது. மருந்துகளும் தரப்பட்டன. சிறிது நேர ஓய்வுக்குப் பின்னர் புத்துணர்ச்சியுடன் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டார் பிரியங்கா.
இருப்பினும் பிரியங்காவின் நலனைக் கருத்தில் கொண்டு இயக்குநர் தருண் மனுஷ்கானி, பிரியங்கா சம்பந்தப்பட்ட ஒரே ஒரு காட்சியை மட்டும் படமாக்கிக் கொண்டு ஷூட்டிங்கை முடித்துக் கொண்டார்.
ஆனால் பிரியங்கா மட்டும் ஓயவில்லை. படப்பிடிப்பை முடித்துக் கொண்டு ஏற்கனவே திடடமிடப்பட்டிருந்த லவ் ஸ்டோரி 2050 பத்திரிக்கையாளர் சந்திப்புக்கு சென்றார்.
பிரியங்காவின் இந்த அதீத தொழில் பக்தியைப் பார்த்து அவரது மேக்கப் மேன் மிக்கி கான்ட்ராக்டர், பிரியங்காவை செல்லமாக கடிந்து கொண்டார். இப்படி உடல்நலம் குறித்து கவலைப்படாமல் இருந்தால்அதுேவ பேராபத்தாக முடியும் என்று அவர் கூறினார்.
ஆனால் பிரியங்காவோ, எனக்காக பத்திரிக்கையாளர்கள் வந்து விட்டனர். நான் பாட்டுக்குப் போய் விட்டால் அவர்கள் ஏமாற்றமடைவார்கள். அது நல்லதல்ல என்று கூலாக கூறினார்.
ரொம்பவே நல்ல பொண்ணா இருக்கீங்களே பிரியங்கா!