ரஜினிக்கு இழுபறியாகும் ஜோடி-ரேகாவும் மறுத்தார்!
ராணா படத்தில் வயதான கெட்டப்பில் வரும் ரஜினிகாந்த்துக்கு ஜோடியாக நடிக்க நடிகை யாரும் இன்னும் அமைந்தபாடில்லை. லேட்டஸ்டாக அணுகிய நடிகை ரேகா, பெரும் சம்பளம் தந்தால் நடிப்பதாக கூறவே அந்த வாய்ப்பு நழுவிப் போய் விட்டதாம்.
ராணா படம் வெளிவருவதற்குள் அதில் நடிக்கவிருப்பவர்கள் மாறிக் கொண்டே இருக்கின்றனர். பாலிவுட் திவா ரேகாவிடம் ராணாவில் வயதான ரஜினிக்கு ஜோடியாக நடிக்க கேட்டதற்கு அவர் 4 விரல்களைக் காட்டினாராம்.
பரவாயில்லையே 40 லட்சம் தான் போல என்று சந்தோஷமாகியுள்ளது படத்தைத் தயாரிக்கும் ஆக்கர் ஸ்டூடியோஸ். ஆனால் ரேகாவோ, ஹலோ, அது நாலு கோடி என்று கூறவே அப்படியெ ஜெர்க் ஆகி, ரேகாவுக்கு பெரிய கும்பிடு போட்டுவிட்டு எஸ் ஆகி விட்டதாம்.
இதையடுத்து தற்போது அந்த கதாபாத்திரத்தில் நடிக்க ஹேமமாலியினிடம் பேசியுள்ளனராம். விரைவில் அவரை சந்திக்கவிருக்கிறார்களாம். ஏற்கனவே முழு ஸ்கிரிப்டை காட்ட மறுத்ததால் வித்யா பாலன் குட்பை சொன்னார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











