யசோதாவான சமந்தா!

சென்னை சில்க்ஸ் உள்பட பல நிறுவனங்களின் விளம்பரப் படங்களில் நடித்துள்ள சமந்தாவுக்கு, யசோதா என புதுப்பெயர் சூட்டிருக்கிறார் இந்தப் படத்தின் இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான ரவிவர்மன்.
பெயரை மாற்றிய நேரம், சமந்தாவின் காட்டில் வாய்ப்பு மழை. முதல் படம் ரிலீசாகும் முன்பே அடுத்து பெரிய படம் ஒன்றில் கதாநாயகி வாய்ப்பு வந்துள்ளது.
இதைத் தவிர நரேன் நடிக்கும் பூக்கடை ரவியிலும் இவர்தான் நாயகி.
மேலும் சில படங்களுக்கும் இவரைக் கேட்டிருக்கிறார்களாம். கோடம்பாக்கத்தில் ஹீரோயின் பஞ்சம் அந்தளவு தலைவிரித்தாடுகிறது.
இதுபோதாதென்று சமந்தாவின்... இல்லையில்லை.. யசோதாவின் ஸ்டில்களைப் பார்த்த ஆந்திர தேசமும் அம்மணியை வாரி அணைத்துக் கொள்ளத் தயாராய் நிற்கிறது (அவ்வளவு வாய்ப்பு!).
மலையாள அம்மாவுக்கும், தெலுங்கு அப்பாவுக்கும் பிறந்த சமந்தாவுக்கு தமிழ், மலையாளம், தெலுங்கு என மூன்று மொழிகளும், சொந்தமாக டப்பிங் பேசுமளவுக்கு அத்துபடி.
அடுத்த தென்னிந்திய கனவுக் கன்னியாக எல்லா தகுதியும் வந்துடுச்சில்ல... கலக்குங்க!


Click it and Unblock the Notifications











