வெயிட்டான தொழிலதிபர் வேணும்! சமீரா

பாலிவுட்டில் முன்னணி நடிகையான சமீரா, இப்போது தமிழ், தெலுங்கிலும் பிஸியாகிவிட்டார். இவர் தந்தை ஒரு தொழிலதிபராம். அதனால் தானும் ஒரு தொழிலதிபரைத் திருமணம் செய்து கொள்ளவே விரும்புவதாகக் கூறியுள்ளார்.
சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், "என்னை பிற நடிகர்களுடன் இணைத்து வரும் கிசு கிசுக்களைப் படித்தால் காமெடியாக உள்ளது. நிச்சயம் ஒரு நடிகரை நான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன்.
நடிகர்களைப் பற்றி எனக்குத் தெரியும். அதேபோல தொழில் உலகைப் பற்றியும் தெரியும். என் தந்தை பெரிய பிஸினஸ்மேன். எனக்கு வரப் போகிறவரும் ஒரு பெரிய தொழிலதிபராக இருந்தால், அப்பாவின் தொழிலுக்கு உதவியாக இருப்பார் அல்லவா?" என்றார்.
Comments


Click it and Unblock the Notifications