படம் வேணாம்; விளம்பரம்தான் முக்கியம் - சனா கான்

By Staff

Sana Khan
புதுப்பட வாய்ப்புகளை விட புதுப் புது விளம்பரங்களில் நடிக்கவே எனக்குப் பிடிக்கிறது என்கிறார் மும்பை அழகி சனா கான்.

சிலம்பாட்டம் படத்தில் சிம்பு ஜோடியாக அறிமுகம் ஆனவர் சனா கான். சிம்புவுடன் சேர்ந்து கெட்டம் ஆட்டம் போட்டார். ஆனால், இப்போதைக்கு புதுப்படங்கள் எதையும் ஒப்புக் கொள்ளாமல் உள்ள சனா, மும்பையில் நிறைய விளம்பரங்களில் நடிக்க கையெழுத்திட்டுள்ளார்.

ஏன் இந்த போக்கு என்று சனாவிடம் கேட்டால், சிலம்பாட்டம் படத்தில் நடித்ததற்காக, எனக்கு நல்ல பெயர் கிடைத்தது. குறிப்பாக நடன காட்சிகளில் சிறப்பாக செய்திருப்பதாகப் பாராட்டுகிறார்கள். ஆனால் படத்தில் கவர்ச்சியாக நடித்திருப்பதாகக் கூறுவதை ஒப்புக் கொள்ள முடியாது.

பாடல்களில் மட்டும் கவர்ச்சியாக நடித்தேன். மற்றபடி எனக்கு அதிக காட்சிகள், வசனங்கள் படத்தில் இருந்தன.

முதல் பாதியில் சிம்புவுக்கு இணையாக எனக்கு காட்சிகள் இருந்தன. பாடல்களும் எனக்கு அதிகம். தமிழில் புதுப் படத்தில் நடிப்பது குறித்து பேசி வருகிறேன். தெலுங்கு, கன்னட மொழிகளிலும் நடிக்க வாய்ப்பு வந்தது. அதையெல்லாம் ஒப்புக் கொள்ளவில்லை. அப்புறம் பார்த்துக் கொள்ளலாம்.

இப்போதைக்கு மும்பையில் விளம்பரப் படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறேன். விளம்பர படங்கள்தான் எனக்கு சினிமா வாய்ப்பை தந்தது. அதனால் அதை மறக்க மாட்டேன்.

அதே நேரம் தெலுங்கு, கன்னட மொழிகளைவிட தமிழில் கவனம் செலுத்தவே விரும்புகிறேன். ஆனால் முதலிடம் விளம்பரப் படங்களுக்குத்தான், என்கிறார் சனா கான்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X