தம்பிக்கோட்டையில் 'பீடா பாண்டியம்மா..'!

இது படத்தின் பெயரல்ல... தம்பிக்கோட்டை படத்தில் சங்கீதா ஏற்றுள்ள கேரக்டரின் பெயர்.
நல்ல மனசு கொண்ட சினிமா 'பொம்பளை ரவுடி'யாக வரும் சங்கீதாவுடன் இதில் மோதுபவர் நான் கடவுள் படத்தில் வில்லனாக வந்த ராஜேந்திரன். ஒரிஜினல் சிக்ஸ் பேக் பார்ட்டி இவர்!
"இந்தப் படத்தில் சங்கீதாவின் பாத்திரம் வெகுவாகப் பேசப்படும். ஏகப்பட்ட பஞ்ச் டயலாக்குகள் வேறு பேசுகிறார் சங்கீதா. பீடா பாண்டியம்மா படிக்காதவராக இருந்தாலும், தனது நல்ல மனதால் அந்த ஊரையே தன் அன்புப் பிடிக்குள் வைத்திருக்கிறார். படிக்காவிட்டாலும் சட்டப் பாயிண்டுகளை புட்டு புட்டு வைப்பார் அவர். இந்த காட்சிகளில் தியேட்டரே அதிரும் பாருங்கள்..." என்கிறார் படத்தின் இயக்குநர் அம்மு ரமேஷ்.
நரேன், பூனம் பாஜ்வா, பிரபு, மீனா, கவுசல்யா என பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடிக்கும் இந்தப் படத்தை ஆர்கே சுரேஷ் தயாரிக்கிறார். சம்மர் ஸ்பெஷலாக திரைக்கு வரும் படம் இது.


Click it and Unblock the Notifications











