ஷீலாவின் பிரேம் கஹானி

குட்டிப் பாப்பாவாக பல தமிழ், தெலுங்கு, மலையாளப் படங்களில் நடித்துள்ள ஷீலா இப்போது நாயகியாகி விட்டார். இளவட்டம் உள்ளிட்ட சில தமிழ்ப் படங்களில் நடித்துள்ள ஷீலா, தமிழில் பெரிய அளவில் வரவேற்பு இல்லாததால், மலையாளம் மற்றும் தெலுங்கில் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்த நிலையில் தற்போது கன்னடத்திற்கும் தனது அழகிய கண்களைத் திருப்பியுள்ளார். இதன் விளைவாக பிரேம் கஹானி என்ற புதிய படம் கிடைத்துள்ளது.
சந்துரு இயக்கும் இப்படத்தில் நடிப்பதற்காக ஷீலாவுக்கு 35 லட்சம் சம்பளம் பேசியுள்ளனராம்.
கதை பிடித்துப் போய் விட்டதால் படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்த ஷீலா, சம்பளத்தை மட்டும் கறாராக பேசிக் கொண்டாராம்.
ஹொள்ளே ஹுடுகி!
Comments


Click it and Unblock the Notifications