கீர்த்தி-அஸ்வின்-காயத்ரி!

வேகம் படத்தின் மூலம் ஹீரோவானவர் அஸ்வின் சேகர். கடந்த ஆண்டு வெளியான இப்படம் வணிக ரீதியாக வெற்றி பெறத் தவறியது. இருப்பினும் அஸ்வினின் நல்ல நடிப்பு பேசப்பட்டது, வரவேற்புக்குரிய நாயகனாக மாறினார் அஸ்வின். தனது படத்தை சூப்பர் ஹிட் ஆக கொடுக்க வேண்டும் என்ற லட்சியத்தில் அடுத்த படத்தின் கதையை தேர்வு செய்வதில் மிகுந்த நிதானம் காட்டினார் அஸ்வின்.
இந்த நிலையில் அஸ்வின் அடுத்த படத்திற்குத் தயாராகி விட்டார். சபரி மூவிஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு நினைவில் நின்றவள் என்று பெயரிட்டுள்ளனர்.
அகஸ்திய பாரதி என்ற புதுமுகம் இயக்கவுள்ளார். கீர்த்தி சாவ்லாவும், புதுமுகம் காயத்ரி வெங்கடகிரியும் அஸ்வினிக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார்.
இயக்குநர் வசந்த்தின் பல படங்களில் உதவியாளராகப் பணியாற்றியவர்தான் அகஸ்திய பாரதி. இப்போது இயக்குநராக அவதாரம் எடுத்துள்ளார்.
1975ம் ஆண்டு வெளியான சூப்பர் ஹிட் காமெடிப் படம்தான் நினைவில் நின்றவள். ஜெயலலிதா, ரவிச்சந்திரன் இணைந்து நடித்திருந்தனர். இப்படத்தைத் தயாரித்து, இயக்கியவர் முக்தா சீனிவாசன். படப் பெயரை முக்தாவின் அனுமதியுடன் தனது மகனிந் படத்திற்காகப் பெற்றுள்ளார் எஸ்.வி.சேகர்.
நினைவில் நின்றவள், இக்காலத்தினருக்கு ஏற்ற அனைத்து அம்சங்களுடன் கூடியதாக இருக்கும் என்கிறார் அகஸ்திய பாரதி. பக்கா பொழுதுபோக்குப் படமாக இதை உருவாக்கப் போவதாகவும் கூறுகிரார்.
டி.இமான் இசையமைக்கிறார். படத்தில் எஸ்.வி.சேகரும் முக்கியப் பாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை முடித்து விட்டு, இயக்குநர் அவதாரம் எடுக்கும் எஸ்.வி.சேகர், அப்படத்திலும் தனது மகனையே ஹீரோவாக நடிக்க வைக்கிறார். இப்படம் மணல் கயிறு படத்தின் 2ம் பாகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











