கேப்டனுடன் மீண்டும் ஷெரில்

By Staff

Sheryl Pinto with Vijaykanth
அரசாங்கம் படத்தில் விஜயகாந்த்துடன் 2வது நாயகியாக இணைந்து கலக்கியுள்ள ஷெரில் பிரின்டோ மறுபடியும் அவருடன் எங்கள் ஆசான் படத்தில் ஜோடி போடுகிறார்.

விஜயகாந்த் நடித்துள்ள 150வது படம் அரசாங்கம். அவருடைய மைத்துனர் சுதீஷ் இப்படத்தைத் தயாரித்துள்ளார். மாதேஷ் இயக்கியுள்ளார்.

விஜயகாந்த்துக்கு இப்படத்தில் இரண்டு ஜோடிகள். ஒருவர் நவ்னீத் கவுர். இன்னொருவர் ஷெரில் பிரின்டோ.

இந்த நிலையில் ஷெரிலுக்கு விஜயகாந்த்துடன் மறுபடியும் ஜோடி போடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அரசாங்கத்தைத் தொடர்ந்து விஜயகாந்த நடிக்கும் படம்தான் எங்கள் ஆசான். இதில்தான் ஷெரில் மீண்டும் விஜயகாந்த்துடன் இணைகிறார். இப்படத்தில் தனி நாயகியாக வருகிறார் ஷெரில்.

முதலில் விஜயகாந்த்துக்கு ஜோடியாக லக்ஷனா நடிப்பதாக இருந்தது. ஆனால் திடீரென அவரை விட்டு விட்டு ஷெரிலை புக் பண்ணி விட்டனர். கலைமணி இயக்குகிறார். பொள்ளாச்சியில் தற்போது படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறதாம்.

இதற்கிடையே அரசாங்கம் படத்திற்கு தணிக்ைக வாரியம் யு சர்ட்டிபிகேட் கொடுத்துள்ளதாம். இதுவரை இப்படி ஒரு படத்தை நாங்கள் பார்த்ததே இல்ைல என்றும் ஆச்சரியத்துடன் தணிக்கை அதிகாரிகள் கூறியுள்ளனராம். மிகவும் வித்தியாசமாக இருக்கிறது, நல்ல கதை என்றும் பாராட்டியுள்ளனராம்.

விஜயகாந்த்தின் 'அரசாங்கத்திற்கு' முதல் வெற்றி!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X