ஷில்பா-ராஜ் குந்த்ரா நிச்சயதார்த்தம்

Shilpa Shetty
பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டிக்கும் அவரது காதலர் ராஜ் குந்த்ராவுக்கும் இன்று திருமண நிச்சயதார்த்தம் நடக்கிறது. டிசம்பரில் இருவருக்கும் திருமணம் என்று ஷில்பாவின் உதவியாளர் தெரிவித்துள்ளார்.

ஷில்பா- ராஜ் குந்த்ராவின் குடும்பத்தினர் (இவர் ஏற்கெனவே திருமணமானவர். மனைவி உள்ளார். அவரும் நிச்சயதார்த்ததுக்கு வருவாரா... தெரியவில்லை!) மட்டுமே இந்த நிச்சயதார்த்தத்தில் பங்கேற்பார்கள் என்றும், லண்டனில் வரவேற்புடன், திருமணம் வரும் டிசம்பர் மாதத்தில் நடைபெறவுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஷில்பாவும் ராஜும் பல மாதங்களாகவே தீவிரமாகக் காதலித்து வந்தனர். ஆனால் திருமணம் பற்றி கேட்கும்போதெல்லாம் இப்போதைக்குக் கிடையாது என்று சொல்லிவந்தார் ஷில்பா. இப்போது திடீரென்று நிச்சயதார்த்தம், திருமணம் என்று அதிவேகமாக செயலில் இறங்கிவிட்டதன் பின்னணி என்னவாக இருக்கும் என அலசத் தொடங்கிவிட்டது மீடியா.

பதினாறு வயதில் மாடலிங், பின்னர் இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடத்தில் 50 படங்களுக்கும் மேல் நடித்திருந்தாலும், உயர்ந்த இடத்தைப் பிடிக்க முடியாமல் தவித்து வந்த ஷில்பாவுக்கு வரப்பிரசாதமாக அமைந்தது பிக் பிரதர் நிகழ்ச்சி.

2007ல் நடந்த இந்த நிகழ்ச்சியில் பல்வேறு பரபரப்புக்கிடையே வென்று சாதனை படைத்தார் ஷில்பா. பல கோடி ரூபாய் பரிசுகள் குவித்தார்.

ஷில்பாவின் முதல் காதலர் அக்ஷய் குமார். ஆனால் சீக்கிரமே அந்தக் காதல் கசந்து போனது. அதன்பிறகுதான் ராஜ் குந்த்ரா ஷில்பாவின் காதலராகி, இப்போது கணவராகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X