கவர்ச்சி நிற்காது - சினேகா

By Staff

Sneha
கவர்ச்சி காட்டி நடிப்பது நீண்ட நாட்களுக்கு நிற்காது, நிலைக்காது. பேமிலி டைப் ரோல்களுக்குத்தான் நல்ல ஆயுள் உள்ளது என்று கூறியுள்ளார் சினேகா.

புன்னகை இளவரசி என திரையுலகினராலும், ரசிகர்களாலும் செல்லமாக அழைக்கப்படுவர் அழகுச் சிரிப்புக்குச் சொந்தக்காரியான சினேகா. குடும்பப் பாங்கான வேடமா, கூப்பிடு சினேகாவை என்று கண்ணை மூடிக் கொண்டு அழைக்கும் அளவுக்கு, அடக்கம் ஒடுக்கமான, பாந்தமான ரோல்களில் அமர்க்களப்படுத்துபவர் சினேகா.

ஆனாலும் சினேகாவும் இப்போதெல்லாம் அவ்வப்போது கவர்ச்சிகரமாகவும் கலக்க ஆரம்பித்துள்ளார். பாண்டி படத்தில் கிளாமரிலும் கலக்கியுள்ளாராம் சினேகா.

இருப்பினும் சினேகாவைப் பொறுத்தவரை கிளாமர் நீண்ட நாட்களுக்கு நிற்காது, குடும்பப் பாங்கான கேரக்டர்களில் நடிப்பவர்களுக்குத்தான் நீண்ட ஆயுள் என்பது அசைக்க முடியாத கருத்தாகும்.

இதுகுறித்து சினேகா கூறுகையில், என்னைப் பொறுத்தவரை கிளாமர் நீண்ட நாட்களுக்கு நீடிக்காது. குடும்பப் பாங்கான ரோல்கள்தான் கை கொடுக்கும், பெயர் பெற்றுத் தரும்.

கிளாமராக நடிப்பதில் நடிகைகளுக்கு மத்தியில் நீண்ட போட்டியே நடக்கிறது. இது ஆரோக்கியமானதல்ல. குடும்பப் பாங்கான ரோல்களில் நடிப்பவர்கள்தான் நீண்ட நாட்களுக்கு ரசிகர்கள் மத்தியில், ஆதரவு இருக்கும்.

நான் கிளாமராக நடிப்பதை விட குடும்பப் பாங்கான ரோல்களில் நடிப்பதையே அதிகம் விரும்புகிறேன். எனது ஓட்டு நடிப்புக்குத்தான், கிளாமருக்கு அல்ல.

உடல் இருக்கும் வரை மட்டுமே கிளாமருக்கு மதிப்பு இருக்கும். ஆனால் நடிப்புத் திறமை இருந்தால், இளமை போன பின்னரும் கூட வாய்ப்புகள் நம்மைத் தேடி வரும்.

எனவே நடிகைகளுக்கு நான் விடுக்கும் கோரிக்கை ஆடைக் குறைப்பை விட்டு விடுங்கள், நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுங்கள் என்பதுதான் என்கிறார் தனது டிரேட் மார்க் புன்னகை சிந்த.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X