அடேங்கப்பா சோனியா...!

செல்வராகவனை விட்டுப் பிரிந்து விட்ட சோனியா மீண்டும் நடிப்பதற்கு முயன்று வருகிறார். இதனால் உடம்பை பொலிவாக்கிக் கொண்டு பேஷன் ஷோக்கள், திரைப்பட விழாக்களுக்குப் போக ஆரம்பித்திருக்கிறார்.
இருப்பினும் அவரைத் தேடி இதுவரை பெரிய அளவில் வாய்ப்புகள் வரவில்லையாம். இந்த நிலையில், மன்மத லீலை படத்தின் ரீமேக் படத்துக்காக சோனியாவை அணுகியுள்ளார் அப்படத்தின் தயாரிப்பாளர்.
பட வாய்ப்புகள் இல்லாமல் இருப்பவர்தானே, பெரிய சம்பளமாக கேட்க மாட்டார் என்று நினைத்து அணுகியுள்ளார். ஆனால் சோனியாவோ அரை கோடிக்கு மேல் சம்பளம் கேட்க அதிர்ச்சியாகி விட்டாராம் அந்த தயாரிப்பாளர்.
முதலில் நடிப்பதாக கூறி ஒத்துக் கொண்ட சோனியா, கிளாமரான கதாபாத்திரம் என்பதை அறிந்து கொண்டவுடன் பெரிய சம்பளமாக கேட்டுள்ளார். ஆனால் அவ்வளவு துட்டுத் தர முடியாதே என்று கூறி விட்டு கிளம்பிப் போய் விட்டாராம் தயாரிப்பாளர்.
இப்போது கேரளாவில் முகாமிட்டு நல்ல அழகியாக தேடிக் கொண்டிருக்கிறார்களாம்.


Click it and Unblock the Notifications











