கன்னடத்தில் நடிக்கவில்லை - த்ரிஷா

By Staff

Trisha
அள்ளிக் கொடுக்கிற தமிழ், தெலுங்குப் படங்களில் நடிக்கவே ஆயிரம் யோசனை செய்யும் நமது முன்னணி நடிகைகள், கிள்ளிக் கொடுக்கிற கன்னட, மலையாளப் படங்களுக்கு ஒப்புக் கொளவது அத்தனை சுலபத்தில் நடக்கிற காரியமா...

தமிழ் தெலுங்குப் பட உலகில் நம்பர் நடிகை என்று சொல்லப்படுகிற த்ரிஷா, அடுத்து லகோரி எனும் கன்னடப் படத்தில் நடிக்கப்போவதாக பல பத்திரிகைளில் செய்திகள் வெளியாகின.

அவ்வளவுதான், மார்க்கெட் அந்தளவுக்கு டல்லடித்து விட்டதா என பார்ப்பவர்களெல்லாம் துக்கம் விசாரிக்க ஆரம்பித்து விட்டார்களாம் த்ரிஷாவிடம்.

கொதித்துப்போன த்ரிஷா, இன்று ஒரு மறுப்பு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

கன்னடப் படங்களில் நடிக்கிற எண்ணம் எனக்கு இப்போதைக்கு இல்லை. தமிழ் - தெலுகுப் படங்களில் நடிக்கவே எனக்கு நேரம் போதவில்லை. இப்போதைக்கு நான்கு தமிழ் படங்களிலும், 3 தெலுங்குப் படங்களிலும் பிஸியாக இருக்கிறேன்.

இதேபோலத்தான் கொஞ்ச நாட்களுக்கு முன் நான் ஒரு மலையாளப்படத்தில் நடிக்கப் போவதாக யாரோ எழுதி விட்டார்கள். என் கவனமெல்லாம் தமிழ், தெலுங்குப் படங்களில்தான்... என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

லகோரி படத்தை இயக்குபவர் முங்காரு மலே என்ற சூப்பர் ஹிட் கன்னப் படத்தைக் கொடுத்த யோகராஜ் பட். புனித் ராஜ்குமார் நடிக்கும் இந்தப் படத்தின் கதை த்ரிஷாவுக்கு ரொம்பப் பிடித்துப் போனதால், தானே முன் வந்து நடிக்க ஒப்புக் கொண்டதாக முதலில் செய்திகள் வெளியாகின.

ஸ்க்ரிப்ட் பிடிக்குதா இல்லையா என்பதா முக்கியம்... எல்லாம் டப்பு மயம்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X