திரிஷாவுக்குத் 'தலைவன்'?

By Staff

Trisha
மர்மயோகி தற்போதைக்கு இல்ல என்பதால் அப்படத்தின் நாயகி திரிஷா அப்செட் ஆகியுள்ளார். இருப்பினும் கமல்ஹாசனின் தலைவன் இருக்கின்றான் படத்தில் திரிஷா நடிக்கக் கூடும் எனத் தெரிகிறது.

கமல்ஹாசனின் பிரமாண்டப் படைப்பாக அறிவிக்கப்பட்டது மர்மயோகி. பெரும் பொருட் செலவில் தயாரிக்கப்படவிருந்த இப்படத்தை பிரமீட் சாய்மீரா நிறுவனம் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் குசேலன் படத்தால் ஏற்பட்ட பெரு நஷ்டத்தால் மர்மயோகிக்கு தேவையான முதலீடுகளைத் திரட்டுவதில் சாய்மீராவுக்கு சிரமம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து படத் தயாரிப்பிலிருந்து அது விலகி விட்டது. வேறு மாற்றுத் தயாரிப்பாளர்களும் சரிவர அமையவில்லை.

இதையடுத்து தற்போதைக்கு மர்மயோகியை கமல்ஹாசன் தள்ளி வைத்திருக்கிறார். இந்தப் படத்திற்குப் பதில் வசூல்ராஜா எம்.பி.பி.எஸ், பாணியில், ஆக்ஷனுடன் கூடிய காமெடி படமாக தலைவன் இருக்கின்றான் என்ற புதிய படத்தை அவர் உருவாக்கவுள்ளார்.

இப்படத்தில் மோகன்லாலும் கமல்ஹாசனுடன் இணைந்து நடிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் மர்மயோகி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் அப்செட் ஆகியுள்ளார் திரிஷா. மர்மயோகிக்காக 100 நாள் கால்ஷீட்டை மொத்தமாக கொடுத்திருந்தார் திரிஷா.

மேலும் சில தெலுங்குப் பட வாய்ப்புகளையும் தவிர்த்து விட்டார். தூய தமிழ்ப் பேச்சுப் பயிற்சி, குதிரையேற்றம் உள்ளிட்டவற்றிலும் அவர் ஈடுபட்டிருந்தார்.

இந்த நிலையில் மர்மயோகி தடைபட்டுள்ளதால், சோகமாகி விட்டார். இருப்பினும் தலைவன் இருக்கின்றான் படத்தில் திரிஷாவையே நாயகியாக கமல்ஹாசன் பயன்படுத்திக் கொள்ளக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த நம்பிக்கையில் கமல்ஹாசனிடமிருந்து போன் காலை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறாராம் திரிஷாவும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X