Don't Miss!
- Technology மிரட்டும் 3 கண் கேமரா.. இதில் 1" இன்ச் ரிட்ராக்டபிள் கேமராவும் இருக்கு.. தூள் பறக்குது HUAWEI Pura 70 Ultra..
- Lifestyle இந்த அறிகுறிகள் காலை வேளையில் தெரியுதா? அப்ப கல்லீரல் ஆபத்தில் இருக்கு-ன்னு அர்த்தம்.. உஷார்..
- News விஜயகாந்த்தை.. ஏக்கத்துடன் தேடுகிறது சென்னை சாலிகிராமம் ரோடு.. அந்த விபூதி எங்கே? கசியுதே நினைவு
- Finance பருவநிலை மாற்றத்தால் உலகமே வறுமையில் வாடப் போகிறது – எச்சரிக்கும் ஆய்வறிக்கை
- Automobiles நடிகர் தனுஷ் ஓட்டு போட வந்த காரின் விலை என்ன தெரியுமா? இவ்வளவு காஸ்ட்லியான காரா இது?
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
இணையதளத்தில் பாஸ்போர்ட்... ஐஸ்வர்யா அதிர்ச்சி!
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார் ஐஸ்வர்யா ராய்.
தனது பாஸ்போர்ட்டை வெளியாட்களிடம் எப்போதும் கொடுக்கமாட்டாராம் ஐஸ்வர்யா. ஆனால் இப்போது எப்படி வெளியானது என்று புரியாமல் குழம்பியுள்ளார். பாஸ்போர்ட்டில் தனது பெயரை ஐஸ்வர்யா என்று குறிப்பிட்டுள்ளார். பிறந்த தேதி 1.11.1973 என்று உள்ளது. இதன் மூலம் ஐஸ்வர்யா ராய்க்கு 37 வயது என்பது உறுதியாகியுள்ளது.
திருமணத்துக்கு முன்பே இந்த பாஸ்போர்ட்டை எடுத்துள்ளார். இதை இண்டர்நெட்டில் வெளியிட்டது யார் என்று விசாரணை நடக்கிறது. போலீசுக்கும் இந்த பிரச்சினை ஒரு புகாராகத் தந்துள்ளனர்.
இந்த விஷயத்தில் திரைப்பட தயாரிப்பு நிறுவனங்கள் மீதுதான் ஐஸ்வர்யா ராய்க்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளதாம். வெளிநாட்டு படப்பிடிப்புகளுக்கு செல்லும்போது விசா பெறும் நடைமுறக்காக பாஸ்போர்ட்டை படப்பிடிப்பு குழுவினர் வாங்கிச் செல்வது உண்டு. அப்போது யாரோ இதனை ஸ்கேன் செய்து இண்டர்நெட்டில் வெளியிட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடக்கிறது.
போலீசார் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கு முன்பு இது போன்று முக்கிய பிரமுகரின் பாஸ்போர்ட் இண்டர்நெட்டில் வெளியான சம்பவங்கள் நடந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.