நிஜத்தில் நான் செம கவர்ச்சி-ரீமா கல்லிங்கல்!

மலையாளத்திலிருந்து தமிழ் சினிமாவுக்கு வந்துள்ள புதுமுகம் ரீமா. யுவன் யுவதி படத்தில் நடித்து வருகிறார். ஜோடியாக நடிப்பவர் பரத். விரைவில் இன்னொரு பெரிய படமும் ரீமாவைத் தேடி வரவுள்ளதாம்.
தமிழ் சினிமாவில் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கும் அட்டகாச ஹீரோயின்களை அட்டாக் செய்து வீழ்த்த காத்திருப்பதாக கூறும் ரீமா படு ஓப்பனாகவும் பேசுகிறார்.
ஹைதராபாத்தில் நடந்த சினிமா விழா ஒன்றில் 2009ம் ஆண்டின் சிறந்த புதுமுக நடிகை என்ற விருது அவருக்குக் கிடைத்தது. அதை வாங்கிக் கொண்ட பின்னர் செய்தியாளர்ளிடம் பேசுகையில், எனக்கு சொந்த ஊர் திருச்சூர். நான்கு படங்களில் நடித்துள்ளேன். தற்போது தமிழில் யுவன் யுவதி படத்தில் நடிக்கிறேன். பரத்துக்கு ஜோடியாக நடிக்கிறேன். விரைவில் பெரிய படம் ஒன்று வரவுள்ளது.
மிஸ் கேரளா போட்டியில் பங்கேற்றுள்ளேன். அதில் 2வது இடம் கிடைத்தது. அதன் மூலம் விளம்பரப் பட வாய்ப்புகள் வந்தன. பிறகு சினிமா வாய்ப்பு வந்தது.
மழை வரப் போகுது என்ற தமிழ்ப் படத்தில் நடிக்க முதலில் அழைக்கப்பட்டேன். இருப்பினும் அது சரிவரவில்லை. இதையடுத்து மலையாளத்தில் ரீட்டு என்ற படத்தில் நடித்து அறிமுகமானேன்.
சினிமாவில் நான் இதுவரை பெரிய அளவில் கிளாமராக நடிக்கவில்லை. அதற்காக என்னை கட்டுப்பெட்டியென்று நினைத்து விடக் கூடாது. உண்மையில், நிஜவாழ்க்கையில் நான் கவர்ச்சிக் கன்னியாக்கும். கவர்ச்சிகரமான உடைகளை அணிவதில் எனக்கு அலாதி ஆர்வம் உண்டு.
குறிப்பாக மேற்கத்திய உடைகளை அணிய பிரியப்படுவேன். நான் கேரளா என்றாலும் படித்தது எல்லாம் பெங்களூரில்தான். எனவே பெங்களூர் பாதிப்பு என்னிடத்தில் உண்டு.
தற்போது தமிழில் நடித்து வருகிறேன். தெலுங்கிலும் நடிக்க ஆர்வமாக உள்ளேன். இரு மொழிகளிலும் கலக்க வேண்டும் என்பதே எனது லட்சியம் என்கிறார் ரீமா.
நடிப்பு இருக்கு, கவர்ச்சி இருக்கு, வெவரமான பேச்சும் இருக்கு. பிறகென்ன கவலை ரீமா, பின்னியெடுப்பேள் போங்கோ...!


Click it and Unblock the Notifications