'மின்மினி' ரோல்களில் சினேகா-ரசிகர்கள் அதிருப்தி

By Sudha

Sneha
கண்ணை மூடி கண்ணைத் திறப்பதற்குள் மாயமாகி விடும் லெவலுக்கு மிகச் சிறிய ரோல்களில் தங்களது அபிமான புன்னகை இளவரசியைப் பார்த்த சினேகா ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனராம். இதுகுறித்து சினேகாவிடமே புலம்பித் தள்ளுகிறார்களாம்.

சமீபத்தில் சினேகா நடித்து 2 படங்கள் வெளியாகின. தமிழில் வந்தேமாதரம், மலையாளத்தில் ஷிக்கார். இரண்டிலுமே சினேகாவுக்கு நடிப்பதற்கான வாய்ப்பே சுத்தமாக இல்லை.

இரண்டு படத்திலுமே சினேகாதான் நாயகி. ஆனால் நாயகியா என்று சந்தேகப்படும் அளவுக்கு மிகச் சிறிய பாத்திரத்தைத்தான் சினேகாவுக்கு கொடுத்துள்ளனர். பெரும்பாலான நேரங்களை ஹீரோக்களே ஆக்கிரமித்துக் கொண்டனர்.

வந்தே மாதரத்தில் ஒரு பாட்டுக்கு டான்ஸ் ஆடியுள்ளார் சினேகா. பிறகு சொற்ப காட்சிகளில் வந்து போகிறார். கவர்ச்சிகரமாகவும் வந்து போனார். அவ்வளவுதான். ஷிக்கார் படத்தில் 2 சீன், ஒரு சாங் என்று முடிந்து போய் விட்டது சினேகாவின் நடிப்புச் சேவை.

இதனால் சினேகாவின் ரசிகர்கள், குறிப்பாக அவரது புன்னகைக்கும், ஹோம்லியான நடிப்புக்கும் அடிமையான பலர் ஏமாற்றமடைந்துள்ளனராம். இதை சினேகா காதுகளுக்கும் கொண்டு சென்றார்களாம். இப்படியெல்லாம் சொத்தையான படங்களில் நடித்து உங்களது பெயரை கெடுத்துக் கொள்ளாதீர்கள் என்று உரிமையோடு கேட்டுக் கொண்டனராம்.

ஆனால் சினேகாவால் இதற்குப் பதிலளிக்க முடியவில்லையாம், மாறாக வழக்கமான தனது புன்னகையை மட்டும் சிந்தினாராம்.

நடிக்கவே தெரியாத, பேசவே தெரியாத நடிகைகளுக்கு மட்டும் படம் முழுக்க வந்து போக விடுவார்கள், கவர்ச்சியை வாரி வழங்க வைப்பார்கள். ஆனால் நடிக்க தெரிந்தவர்களை, நன்றாக தமிழ் பேச தெரிந்தவர்களை இப்படி 'பிட் பிட்'டாக காட்டி பிய்த்தெடுப்பார்கள். நல்லா இருக்கே இந்த டீலிங்...!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X