மீராவுக்கு 'அம்மா' தடை!

By Staff

Meera Jasmine
'ட்வெண்ட்டி: 20' படத்தில் நடிக்க மறுத்த மீரா ஜாஸ்மின் இனி மலையாளப் படங்களில் நடிக்கக் கூடாது என மலையாள திரைப்பட நடிகர்கள் சங்கமான 'அம்மா' ரெட் போட்டு விட்டது.

நல்ல நடிகை என்ற தனது புகழுக்கு இணையாக கால்ஷீட் சொதப்பலிலும் பெயர் பெற்றவர் மீரா ஜாஸ்மின். மலையாளத்தின் அனைத்து முன்னணி நடிகர்களிடமும் மீரா ஏதாவது ஒரு வகையில் கெட்ட பெயரைச் சம்பாதித்துக் கொண்டுள்ளார்.

சில மாதங்களுக்கு முன் திலீப்பின் கல்கத்தா நியூஸ் படத்தில் நடித்த போது தகராறு செய்தார் என இவர் மீது மலையாள நடிகர் சங்கத்தில் புகார் செய்திருந்தார் படத்தின் இயக்குநர் பிளெஸ்ஸி. இருந்தாலும் அவரது நடிப்பாற்றலுக்காக இதுவரை அனைவரும் பொறுத்துக் கொண்டனர்.

இப்போது மோகன்லாலுடன் ஜோடியாக இவர் நடித்துள்ள இன்னாதே சிந்தாவிஷயம் கேரளாவெங்கும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில், மலையாள நடிகர்களின் அமைப்பான 'அம்மா' தயாரித்து வரும் மலையாளப் படமான 'ட்வென்டி: 20'-ல் நடிக்க முடியாது என மீரா தெளிவாகக் கூறிவிட்டதால், இனி அவரை வைத்துப் படங்கள் எடுக்கக்கூடாது என அனைத்து மலையாளத் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கும் 'அம்மா' நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மலையாளத்தில் அசைக்க முடியாத நம்பர் ஒன் நாயகியாகத் திகழ்ந்து கொண்டிருக்கும் மீராவுக்கு இதனால் பெரும் சிக்கல் எழுந்துள்ளது. தற்போது 4 மலையாளப் படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் மீரா என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து மீராஜாஸ்மினுடன் பேசினோம். அவர் கூறியதாவது:

அம்மாவின் படத்தில் நடிக்கக் கூடாது என்று எனக்கு எந்த உள்நோக்கமும் இல்லை. ஆரம்பத்தில் இப்படத்துக்காக நான் கொடுத்த தேதிகளை வீணடித்துவிட்டார்கள். இப்போது தெலுங்கு மற்றும் தமிழ்ப் படங்களுக்காக தேதி கொடுத்துள்ளேன். மேலும் சில மலையாளப் படங்களுக்கும் ஏற்கெனவே தேதிகளை ஒதுக்கிக் கொடுத்துவிட்டேன்.

இதுகுறித்து நான் தெளிவாக விளக்கிக் கூறிய பின்னும் தடை அறிவித்திருப்பது அதிர்ச்சி தருகிறது. இப்போதும் என் நிலையைப் புரிந்து கொள்வார்கள் என நம்புகிறேன். ஒரு நடிகையாக எனக்கு அனைத்து மொழிப் படங்களும் ஒன்றுதான்.... தேதிகள் ஒத்து வந்தால் அம்மா படத்திலும் நடிப்பேன்... என்றார் மீரா.

சேட்டன்மாரே, தாய்மாரை அழ வைக்காதீங்கோ!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X