மகாராஜாவில் அஞ்சலி

ஏவி.எம். பிள்ளையார் கோவிலில் இப்படத்தின் பூஜை நடைபெற்றது. அர்ஜூன் பூஜையில் கலந்து கொண்டார். உடன் ரம்பாவும் பங்கேற்றார்.
இப்படத்தில் நாசர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அவருடன் நிதின் சத்யா, சாமுராய் பட நாயகி அனிதா, கற்றது தமிழ் பட நாயகி அஞ்சலி ஆகியோரும் உள்ளனர்.
அனிதா நீண்ட நாளைக்குப் பிறகு நடிக்க வருகிறார். இடையில் விளம்பரப் படங்களில் நடித்துக் கொண்டிருந்ததாக தெரிவித்தார்.
ஜெனரேஷன் கேப் குறித்த படம் இது. இதை காமெடியாக சொல்லவிருக்கிறாராம் மனோகர். படத்தில் கோவை சரளாவும், சரண்யாவும் முக்கிய வேடத்தில் வருகிறார்கள்.
படத்தில் எம்.எஸ்.விஸ்வநாதனும் இருக்கிறார். கருணாஸ் முக்கிய காமெடியனாக வருகிறார். நகைச்சுவைப் பகுதியையும் அவர் வடிவமைக்கிறார்.
படத்தின் கதை தன்னை அப்படியே வசீகரித்து விட்டதாகவும், இதனால் கேட்ட கால்ஷீட்டை அப்படியே தந்து விட்டதாகவும் சிலாகித்துக் கூறுகிறார் நாசர்.
படத்தை ஜே.ரவி தயாரிக்க, இமான் இசையமைக்கிறார். ஆறு பாட்டுக்களையும் போட்டுக் கொடுத்து விட்டாராம்.


Click it and Unblock the Notifications











