சார்மியின் 'திரில்' கிளாமர்!

By Staff

Charmi
தெலுங்கில் சார்மி நடித்த திரில்லர் பிளஸ் கிளாமர் படமான மந்த்ரா அதே பெயரில் தமிழுக்கு டப் ஆகி வருகிறது.

தமிழில் தனது திரையுலக வாழ்க்கைக்குப் பிள்ளையார் சுழி போட்ட சார்மி இப்போது தெலுங்குத் திரையுலகின் கிளாமர் தேவதையாக வலம் வந்து கொண்டுள்ளார்.

சார்மியின் கவர்ச்சிக்கு முன்னால் அங்கு மற்ற நாயகிகள் இதுவரை மேட்ச் ஆக முடியவில்லை. இதனால் வேறு ஹீரோயினாக இருந்தாலும் சார்மிக்கும் ஒரு ரோல் கொடுத்து, கிளாமர் சுழலை சுழல விடத் தவறுவதில்லை தெலுங்குப் படவுலகினர்.

தெலுங்கில் இளம் ஹீரோ சிவாஜியுன் இணைந்து சார்மி நடித்த படம்தான் மந்த்ரா. திரில்லர் படமான இதில் கிளாமரில் கதி கலக்கியிருக்கிறார் சார்மி.

இப்படத்ைத தற்போது தமிழில் டப் செய்துள்ளனர். இப்படத்தின் ஆடியோ வெளியீடு சென்னையில் நடந்தது. தெலுங்கில் இப்படம் சூப்பர் ஹிட் ஆனது. தமிழிலும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகும் என்பதை சார்மியின் கவர்ச்சி சொல்லாமல் சொல்கிறது.

ஆடியோ விழாவின்போது காட்டப்பட்ட டிரெய்லரும், ஒரு பாடல் காட்சியும், சார்மி இப்படத்தில் காட்டியுள்ள கவர்ச்சியின் அளவுக்கு, ஒரு பானைக்கு ஒரு சோறு பதம் என்பது போல இருந்தது.

தெலுங்கு ரசிகர்களை ஜிலுஜிலுக்க வைத்த சார்மியின் சார்மிங் தமிழ் ரசிகர்களையும் ஈர்க்குமா? அக்டோபர் வரை பொறுத்திருப்போம்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X