ஷாமுக்கு ஓகே சொன்ன இலியானா!

தமிழ்-தெலுங்கு என இரு மொழிகளிலும் தயாராகும் இந்தப் படத்தை இயக்குபவர் சுரேந்தர் ரெட்டி. இந்தப் படத்தில் ஷாம் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.
இலியானாவை ரஜினியின் சுல்தான்- தி வாரியர் படத்தில் நடிக்க அழைப்பு விடுத்தார் சௌந்தர்யா ரஜினி. ஆனால் சம்பளம் கட்டுபடியாகாது என மறுத்துவிட்டார் இலியானா.
விஜய் தனது ஒவ்வொரு படத்துக்கும் இலியானாவுக்கு தூது அனுப்புவதும் அதை இலியானா நிராகரிப்பதும் வழக்கமாகிவிட்டது. தெலுங்கில் இன்றைய தேதிக்கு நம்பர் நாயகி இவர்தான் என்பதால் ஏக கிராக்கி. அட, இந்தி வாய்ப்புக்கே அப்புறம் பார்க்கலாம் எனக் கூறிவிட்டாராம்.
ஆனால் ஷாம் படத்துக்கு மட்டும் அவர் ஓகே சொல்லியிருப்பது ஆச்சர்யத்தைக் கிளப்பியுள்ளது. ஷாமும் இதை சொல்லிச் சொல்லி மகிழ்ந்து கொண்டிருக்கிறார்.
சூர்யா நடிக்கும் ஒரு படத்தில் இரண்டாவது நாயகியாக வந்திருக்கும் வாய்ப்பை ஏற்பது குறித்து யோசித்து வருகிறாராம் இலியானா!


Click it and Unblock the Notifications











