மீண்டும் விஜயலட்சுமி!

கன்னடத்தில் ஒரு காலத்தில் பிசியாக இருந்து வந்த தமிழச்சி நடிகைதான் விஜயலட்சுமி. கன்னடத்தில் பெரிய ரவுண்டு அடித்த அவர் தமிழில், பிரண்ட்ஸ் படம் மூலம் அறிமுகமானார். முதல் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்த அவருக்கு தமிழில் பெரிய அளவில் வாய்ப்புகள் வரவில்லை. இருப்பினும் சத்யராஜ் உள்ளிட்டோருடன் ஜோடி போடும் வாய்ப்புகள் கிடைத்தன.
அப்படியும் இப்படியுமாக நடித்து வந்த விஜயலட்சுமி ஒரு கட்டத்தில் டிவிக்குத் தாவினார். ராதிகாவின் ரேடான் டிவி வழங்கிய நிகழ்ச்சி ஒன்றைத் தொகுத்து வழங்கினார். அப்போது சில சர்ச்சைகள் ஏற்படவே அதிலிருந்த விலகி விட்டார்.
பின்னர் அமைதியாக இருந்து வந்த விஜயலட்சுமி கிட்டத்தட்ட எந்த மொழிப் படத்திலும் இப்போது நடிக்கவில்லை. இந்த நிலையில் மீண்டும் நடிக்கும் ஆர்வம் வந்து கோலிவுட்டுக்கு லேண்ட் ஆகியுள்ளார்.
சென்னையில் முகாமிட்டு பட விழாக்களுக்கு போய் வருகிறார். அதிலும் கவர்ச்சிகரமான உடையுடன் வலம் வரும் விஜயலட்சுமியைப் பார்ப்பவர்கள் நம்ம விஜயலட்சுமியா என்று ஆச்சரியமாக பார்க்கும் அளவுக்கு கவர்ச்சிகரமாக மாறியுள்ளாராம் விஜயலட்சுமி.
எப்படியாவது சில படங்களைப் பிடித்து மறுபடியும் கோலிவுட்டில் ஒரு ரவுண்டு வந்து விட வேண்டும் என்ற வெறியுடன் கிளம்பியிருக்கிறாராம் விஜயலட்சுமி.
விஜயலட்சுமிக்கு விஜயம் கிடைக்குமா?


Click it and Unblock the Notifications











