பட்டுப்புடவை கட்டிக்கிட்டா குளிப்பாங்க!-ப்ரியாமணி

By Staff

Priyamani
அது என்னமோ தெரியவில்லை, நான் கிளாமராக நடித்தால் மட்டும் எல்லோரும் வரிந்து கட்டிக் கொண்டு கருத்து சொல்ல வந்துவிடுகிறார்கள் என்கிறார் நடிகை ப்ரியாமணி மகா கடுப்புடன்.

பருத்தி வீரனுக்குப் பிறகு, கிரமாப்புற பெண் இமேஜை மாற்றுவதாகக் கூறிக்கொண்டு தாறுமாறான ஆடைக்குறைப்புப் புரட்சியில் ஈடுபட்டவர் ப்ரியாமணி. இதனால் அவரைப் பற்றி தினமும் ஏதாவது செய்தி வருவது வழக்கமாகிவிட்டது. அப்படியும் அவரது படங்கள் பெரிய அளவில் ஓடியதாகத் தெரியவில்லை.

பருத்தி வீரனில் பாவாடை தாவணியில் நடித்தது குற்றமா... உடனே ஆளாளுக்கு பாவாடை தாவணி காஸ்ட்யூமோடுதான் வருகிறார்கள்.

இதிலிருந்து சற்று மாறுபட்டு நடிக்கலாமே என்றுதான் சற்று கவர்ச்சியான வேடஹ்களில் நடித்தேன். காவர்ச்சி காட்டுவதில் ஒரு பெண்ணான நானே இத்தனை தூரம் முன் வருகிறேன். ஆனால் அதற்கு இவர்கள் எழுப்பும் விமர்சனம்... ஒரே கடுப்பாக உள்ளது.

அது என்னமோ நான் கிளாமராக நடித்தால் மட்டும் குற்றம் சொல்கிறார்கள். மற்றவர்கள் நடித்தால் அதைப் பற்றி எதுவும் பேசுவதில்லை. தெலுங்கில் 'துரோனா' படத்தில் நீச்சல் உடையில் நடித்தது பற்றி கேட்கிறார்கள். நீச்சல் குளத்தில் குளிக்கப் போகும்போது பட்டுச்சேலை கட்டிக் கொண்டா குளிப்பாங்க...!.

சினிமா என்றால் க்ளாமர்தான். அதில் தப்பே இல்லை. எப்போதும் அதையே பேசிக்கொண்டிருப்பதுதான் எனக்கு தப்பாகப்படுகிறது, என்றார்.

தப்பே இல்ல!!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X