நான் அழகானவள் அல்ல-கங்கனா

By Staff

Kangana Ranaut
சினிமா உலக பார்வையில் நான் ரொம்ப அழகானவள் இல்லை; செக்ஸி லுக்கும் எனக்குக் கிடையாது என்று எனக்கும் தெரியும். ஆனால் நல்ல நடிப்பை எதிர்பார்ப்பவர்கள் மட்டும் என்னைத் தேடி வந்தால் போதும், என்கிறார் கங்கனா ரனவத்.

தாம்தூம் படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக வந்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் கங்கனா. ஏற்கெனவே இந்தியில் பல படங்களில் நடித்துள்ளார்.

தனது திரையுலக அனுபவங்கள் குறித்து இப்படிக் கூறுகிறார்:

"நடிக்க வந்த புதிதில் என் காது படவே எத்தனையோ கமெண்டுகள், கிண்டல்கள். என் தலைமுடி, என் உடல்வாகு குறித்தெல்லாம் எவ்வளவோ கமெண்டுகளைக் கேட்டுவிட்டேன். நான் செக்ஸியாக இல்லை என்று என்னிடமே கூறினார்கள். செக்ஸி தோற்றத்துக்கும் எனக்கும் சம்பந்தமில்லைதான். செக்ஸூக்கும் எனக்குமே கூட இப்போதைக்கு (!!) சம்பந்தமில்லைதான்.

ஆனால் எனக்கு நம்பிக்கை இருந்தது. தோற்றத்துக்கும் அப்பால் நடிப்புத் திறமை என்று ஒன்றிருக்கிறதல்லவா... அதை கேங்ஸ்டர் வெற்றி நிரூபித்தது. தமிழில் தாம்தூம் ஒரு இனிய அதிர்ச்சி என்றுதான் சொல்வேன். இப்போது என் திறமைக்கு நேரம் வந்திருக்கிறது.

எல்லோரும் என் காதல் பற்றிக் கேட்கிறார்கள். அது என் பர்சனல் விஷயம். நானும் சுமன் சேகர் மகன் ஆதித்யனும் 8 மாதங்களுக்கு முன் டேட்டிங் போனது உண்மைதான். இப்போது எங்கள் உறவு குறித்து எதுவும் சொல்வதற்கில்லை, என்றார்.

தொடர்ந்து தமிழ்ப் படவாய்ப்புகளை ஒப்புக் கொள்ளவும் முடிவு செய்துள்ளாராம் கங்கனா!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X