அஜீத் படத்தில் இலியானா?

அஜீத் நடிக்கும் ஏகன் படத்தில் முதலில் ஷ்ரியா நடிப்பதாக இருந்தது. ஆனால் அவரை நீக்கி விட்டன். பின்னர் காத்ரீனா கைப் நடிப்பார் என அறிவிக்கப்பட்டது. பிறகும் அவரும் விலகி விட்டார்.
இதனால் மறுபடியும் நாயகி வேட்டையில் தீவிரமாக இறங்கினார் ராஜு சுந்தரம். லேட்டஸ்டாக அவர் இலியானாவை அணுகியுள்ளார். கதையைக் கேட்டுக் கொண்ட இலியானா பரிசீலிப்பதாக கூறியுள்ளாராம்.
கேடி படத்தில் நடித்தவர் இலியானா. ஆனால் அந்தப் படத்தால் ஏற்பட்ட மோசமான அனுபவம் காரணமாக தமிழ் சினிமா பக்கமே திரும்பிப் பார்ப்பதில்லை என்று தீர்மானமாக இருக்கிறார்.
முன்பு போக்கிரி தமிழில் ரீமேக் ஆனபோது தெலுங்கில் நாயகியாக நடித்த இலியானாவையே தமிழிலும் நடிக்க வைக்க முயற்சித்தார் பிரபுதேவா. ஆனால் முடியாது என்று கூறி விட்டார் இலியானா.
அதேபோல கெட்டவன் படத்தில் இலியானாவை நடிக்க வைக்க முயன்றார் சிம்பு. இதற்காக பிளாங்க் செக் கூட கொடுக்கத் தயாராக இருந்தார். ஆனால் அதையும் நிராகரித்து விட்டார் இலி.
ஆனால் இலியானாவின் முடிவில் தற்போது மாற்றம் ஏற்பட்டிருப்பதாக தெரிகிறது. அவர் அஜீத் படம் மூலம் தமிழுக்கு விசிட் அடிக்க விருப்பமாக இருப்பதாக கூறப்படுகிறது. இன்னும் பேச்சுவார்த்தைகள் நிறைவு பெறவில்லையாம்.
தற்போது தெலுங்கில் பவன்கல்யாணுடன் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் இலியானா. அடுத்து மகேஷ் பாபுவுடன் நடிக்கவுள்ளார்.
இதற்கிடையே ஏகன் என்ற பெயர் சரியில்லை. நல்ல பெயராக பிடியுங்கள் என்று ராஜுசுந்தரத்திடம் கூறியுள்ளாராம் அஜீத்.
தமிழுக்கு வர இலிக்கு ஏன் இந்த கிலி?


Click it and Unblock the Notifications