இந்திரா காந்தியாக நடிக்கிறார் ப்ரியங்கா சோப்ரா!

மறைந்த முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக எடுக்கப்படுகிறது.
இதில் அவரது அரசியல் பணிகள், பிரதமராக தேர்வானது, உலக தலைவர்களுடனான சந்திப்புகள், இந்தியாவுக்காக அவர் போட்ட புதிய திட்டங்கள் போன்றவை காட்சிகளாக்கப்படுகின்றன.
இறுதியில் பாதுகாவலரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவமும் படத்தில் இடம் பெறுகிறது.
இந்த படத்தில் இந்திரா காந்தி வேடத்தில் பிரியங்கா சோப்ரா நடிக்கிறார். அமெரிக்காவில் வசிக்கும் இந்தியரான கிருஷ்ணா ஷா இப்படத்தை தயாரிக்கிறார்.
மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாராகிறது இந்தப் படம். இதர நடிகர், நடிகைகள் தொழில்நுட்பகே கலைஞர்கள் தேர்வு நடக்கிறது. விரைவில் படப்பிடிப்பு துவங்கவிருப்பதாக கிருஷ்ணா ஷா அறிவித்துள்ளார்.
இந்தப் படத்துக்கான முன் அனுமதியை இந்திரா குடும்பத்தாரிடம் பெற்றுவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
More from Filmibeat
இந்திப் படம் இந்திரா காந்தி கிருஷ்ணா ஷா ப்ரியங்கா சோப்ரா வாழ்க்கை வரலாறு biography bollywood film indhira gandhi priyanka chopra


Click it and Unblock the Notifications











