மாளவிகாவின் 'காக்டெய்ல்' காமெடி!

By Staff

Malavika
கவர்ச்சி விருந்து படைத்து வந்த மாளவிகா காமெடி ராணியாக அவதாரம் எடுத்துள்ளார். இனிமேல் இரண்டையும் கலந்து ரசிகர்களை இன்புற வைக்கப் போகிறாராம்.

கல்யாணத்திற்கு முன்பு வரை நாயகி, துணை நாயகி, குத்துப் பாட்டு, வில்லி என கலக்கி வந்த மாளவிகா இப்போது கல்யாணத்திற்குப் பிறகும் தனது கிளாமர் காலேட்சபத்தை விடவில்லை. தொடர்ந்து குத்துப் பாட்டுக்களில் கலக்கி வருகிறார்.

இந்தநிலையில் கூடுதலாக காமெடி கேரக்டருக்கும் தாவியுள்ளார். சிங்கக்குட்டி படத்தில் விவேக்குடன் இணைந்து காமெடியிலும் கலாய்த்துள்ளார். கூடவே கவர்ச்சியையும் வாரி இறைத்துள்ளார்.

இந்த புது கெட்டப் க்ளிக் ஆகவே தொடர்ந்து காமெடியும் செய்து கலகலக்க வைக்கப் போகிறாராம். அதிலும் மாளவிகாவின் சென்ஸ் ஆப் ஹ்யூமரால் கவர்ந்திழுக்கப்பட்ட விவேக், தனது படங்கள் சிலவற்றில் காமெடி டிராக்கில் கலக்க மாளவிகாவை அழைத்துள்ளாராம்.

காமெடி செய்தாலும் கூடவே கிளாமரையும் கலந்து காக்டெய்ல் களேபரமாக இருக்குமாம் மாளவிகாவின் எதிர் வரும் படங்கள்.

முன்பு போலவே சினிமாவிலும் பிசியாக இருக்கும் மாளவிகா, கூடவே டிவி பக்கமும் படு பிசியாகி வருகிறார். சன் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் டான்ஸர் நிகழ்ச்சி ஹிட் ஆகி விடவே அதன் 2ம் பாகம் இப்போது ஒளிபரப்பாக ஆரம்பித்துள்ளது. முதல் எபிசோடில் நடுவராக இடம் பெற்ற மாளவிகா, இந்த 2ம் பாகத்திலும் புகுந்து விளையாடுகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X