மிதுனாவுக்கு எலும்பு முறிவு

மாமதுரை படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் மிதுனா. அதன் பின்னர் தற்போது தீயவன் என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதில் இரு நாயகர்கள். ஒருவர் உதய், இன்னொருவர் ரஞ்சன்.
சென்னையில் இந்த மூன்று பேரும் பங்கேற்ற பாடல் காட்சியை சமீபத்தில் படமாக்கினர். அப்போது டான்ஸ் ஒத்திகையில் மிதுனா பங்கேற்றார். அந்த சமயத்தில், திடீரென ஸ்லிப் ஆகி கீழே விழுந்தார். இதில் காலில் அடிபட்டது. வலியால் துடி துடித்தார் மிதுனா.
உடனடியாக டாக்டர்களிடம் கூட்டிச் சென்றனர். மிதுனாவுக்கு எக்ஸ்ரே எடுத்து பார்த்தபோது அவரது காலில் எலும்பு முறிந்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து மிதுனாவை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
Comments


Click it and Unblock the Notifications