புளோராவுக்கு பச்சைக் கொடி!

விஜயகாந்த்தின் கஜேந்திரா, கார்த்திக்குடன் குஸ்தி, ஸ்ரீமனுடன், படு கிளாமரான கேரக்டரில் ஸாரி எனக்கு கல்யாணம் ஆயிடுச்சு உள்ளிட்ட படங்களில் நடித்தவர் புளோரா.
ரஜினியின் குசேலன்,கருணாஸ் நடிக்கும் திண்டுக்கல் சாரதி ஆகிய படங்களில் தற்போது நடித்துள்ளார்.
சமீபத்தில், அமெரிக்காவில் நடைபெறவிருந்த கலை நிகழ்ச்சியில் பங்கேற்க விசா கோரி விண்ணப்பித்திருந்தார் புளோரா. ஆனால் அவர் போலியான ஆவணங்களைக்காட்டி தனது உதவியாளருக்கு விசா பெற முயன்றதாக கூறி ஆள் மாறாட்ட வழக்கில் அவர் கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து அவரும், அவருடன் வந்த பெண்ணும் சிறையில் அடைக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து புளோராவின் பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப்பட்டு முடக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நடிகர் சங்கமும் புளோரா மீது நடவடிக்ைக எடுத்தது. அவர் தமிழ் படங்களில் நடிக்க தடை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் இந்தவழக்கில் புளோராவின் பாஸ்போர்ட் மறுபடியும் அவரிடம் திரும்ப வழங்கப்பட்டுள்ளது. அவர்வெளிநாடுகளுக்கு செல்ல தடை இல்ைல என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல புளோரா தமிழ்ப் படங்களில் நடிக்க தடை இல்லை என்று நடிகர் சங்கமும் அறிவித்துள்ளதாம்.
இதுகுறித்து புளோரா கூறுகையில், இதுவரை 30 படங்களில் நடித்திருக்கிறேன். எனக்கு கடந்த மார்ச், ஏப்ரல் ஆகிய 2 மாதங்களும் மிகவும் சோதனையான காலமாக அமைந்தது. என் பாஸ்போர்ட்டை கோர்ட்டு என்னிடம் ஒப்படைத்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.
நான் தொடர்ந்து சினிமாவில் நடிப்பேன். இப்போது என்னுடைய பெயரை எண் கணித ஜோதிடத்தின்படி மயூரி என்று மாற்றிக்கொண்டேன். இந்த பெயரில் தான் இனிமேல் நடிப்பேன் என்றார்.


Click it and Unblock the Notifications











